தமிழக முழுவதும் ஜூலை 15 தொடங்கி வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற உள்ளது. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் மூலமாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மொத்தம் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்குச் சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தால் கட்டாயம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, “விடுபட்ட தகுதிவாய்ந்த மகளிருக்கு இந்த முறை கட்டாயம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். மேலும் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் புதிய பயனர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
