“நீங்க அப்படி பேசாதீங்க அண்ணே… எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு”…. மேடையில் உடைந்த புஸ்ஸி ஆனந்த்…. அரங்கமே அதிர்ச்சி…..!

By Nanthini on கார்த்திகை 1, 2026

Spread the love

தமிழ்நாடு நாள் விழாவானது பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பங்கேற்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத் தலைவர்கள், நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வன்னி அரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் மொழியின் தொன்மை, அதன் இனிமை மற்றும் உலகளாவிய அவசியம் குறித்தும், அரசு அலுவலர்கள் வாரத்தில் ஒரு நாள் பாரம்பரிய உடை அணிய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பேசினார்.

தன் உரையின் போது தனது தனிப்பட்ட அனுபவங்களையும் நேர்மையான ஆட்சி முறையையும் சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு ஒருவர் 5 கோடி ரூபாய் தருவதாக என்னிடம் பேசினார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே, 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் தகுதி இல்லாதவருக்கு அந்தப் பதவியை வழங்க மாட்டோம் எனக் கூறி மறுத்துவிட்டேன். அதற்குப் பொருத்தமான புஷ்பவனம் குப்புசாமி அவர்களை ஒரு ரூபாய் கூட வாங்காமல் அந்தப் பதவியில் நியமித்தோம்,” என்று குறிப்பிட்டார்.

   

தொடர்ந்து தனது உணர்வுபூர்வமான எண்ணங்களை வெளிப்படுத்திய அவர், “எனது வாழ்நாளுக்குப் பிறகு, தம்பிகளும் தங்கைகளும் வந்து வீரவணக்கம் முழங்கி பிரியாவிடை கொடுக்கும் போது, என் உடலோடு சேர்த்து ஒரு திருக்குறள் புத்தகத்தையும் வைத்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்று உருக்கமாகக் கூறினார். நேர்மையான பணிகளோடு, திருக்குறள் மீதான தனது மாறாத பற்றையும் வெளிப்படுத்திய அவரது பேச்சு அரங்கத்தில் இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

   

இதன் பின்னர் மேடையில் பேசிய புஸ்ஸி ஆனந்த், “ராஜ்மோகன் அண்ணன் திருக்குறளோடு தனது நல்லடக்கம் குறித்துப் பேசியது எனக்கு மிகவும் சங்கடமாகவும் வருத்தமாகவும் இருந்தது. கல்வித்துறையில் ஊழலே இல்லாத மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் அவர், இன்னும் நூறாண்டுகளுக்கு மேல் நலமுடன் வாழ வேண்டும். உங்களை விட்டுவிட நாங்கள் யாரும் தயாராக இல்லை; எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் அண்ணனும் தலைவருமானவர் உங்களுடன் இருக்கிறார். அதனால் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று கூறி தனது அன்பையும் வாழ்த்துகளையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.