காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜய்க்கு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கணேஷ்குமார் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்றிருந்தனர்.
அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகத்திற்கு வருவதை முன்கூட்டியே அறிந்த அமைச்சர் ஆனந்த், மரபுகளைத் தாண்டி நேசத்துடன் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார். அமைச்சரின் இந்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு வியந்த அன்புமணி, “நாங்களே உள்ளே வந்திருப்போமே, நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என நெகிழ்ச்சியுடன் கேட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சரின் அறைக்குச் சென்ற அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பரஸ்பரம் வாழ்த்துகளையும் மரியாதையையும் பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, அமைச்சர் ஆனந்த் தனது அதிகாரபூர்வ அமைச்சர் நாற்காலியில் அமராமல், அன்புமணிக்கு அருகில் இருந்த சாதாரண நாற்காலியில் அமர்ந்தார். இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அன்புமணி ராமதாஸ் பதற்றமடைந்து, “நீங்கள் அமைச்சர் சீட்டில்தான் உட்கார வேண்டும்” என அன்புக் கட்டளையிட்டார். அமைச்சரின் இந்த எளிய மற்றும் கனிவான அணுகுமுறை அங்கிருந்தவர்களை திக்குமுக்காட வைத்தது. இந்த நெகிழ்ச்சியான நிகழ்வைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேகதாது அணைக்கு எதிரான ஆலோசனைக் கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் சுமுகமாக நடைபெற்றது.
தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…
தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். கடந்த…