தமிழகத்தில் உளுந்து மற்றும் பச்சை பயிருக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சை பயிறு ரூ.87.68, ஒரு குவிண்டால் ரூ.8,768 குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல உளுந்து ஒரு கிலோ ரூ.78, ஒரு குவிண்டால் ரூ.7,800 என குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பல லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவார்கள்.
