Connect with us

அவ்வளவுதான் நம்ம வாழ்க்கைனு தற்கொலை முடிவெடுத்த ‘மனோபாலா’.. மறுநாள் நிகழ்ந்த அதிசயம்.. மனம் திறந்த மைக்மோகன்..!

CINEMA

அவ்வளவுதான் நம்ம வாழ்க்கைனு தற்கொலை முடிவெடுத்த ‘மனோபாலா’.. மறுநாள் நிகழ்ந்த அதிசயம்.. மனம் திறந்த மைக்மோகன்..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்த மனோபாலா ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானது இயக்குனராகத்தான். பின்னர் போக போக தான் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த அனைவரையும் சிரிக்க வைத்தார். அவருடைய மரணம் இன்றளவும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆரம்பத்தில் மனோபாலாவிற்கு சினிமாவில் யாரையும் தெரியாது அவருக்கு அடைக்கலம் கொடுத்தது நடிகர் கமலஹாசன் வீடுதான். கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், சந்திரகாசன் ஆகியோர் மனோபாலாவிற்கு உதவி செய்தார்கள். அதனை தொடர்ந்து பாரதிராஜாவிடம் அசோசியேட்டிவ் ஆக மனோபாலாவை சேர்த்து விட்டது நடிகர் கமல்ஹாசன் தான்.

   

தன்னுடன் உதவியாளராக இருந்த மனோபாலாவின் திறமையை கண்ட பாரதிராஜா அவரை ஒரு இயக்குனராக மாற்றி அழகு பார்த்தார். மனோபாலா முதன் முதலில் இயக்கிய திரைப்படம் ஆகாய கங்கை. இந்த படம் சுமாரான வெற்றியை கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் மிகவும் தவித்து வந்தார் மனோபாலா. அப்படி ஒரு சூழ்நிலையில் நடிகர் மைக் மோகன் அவர் சந்தித்து இருக்கின்றார். அப்போது அவர் மிகுந்த வருத்தத்தில் இருக்க மைக் மோகன் என்னாச்சு என்று கேட்டிருக்கின்றார்.

 

எனக்கு யாரும் படம் தர மாட்டேங்குறாங்க, நான் சூசைட் பண்ணிக்க போறேன். நீ கூட எல்லாருக்கும் கால்ஷீட் தர எனக்கு மட்டும் ஒரு கால்ஷீட் கொடுக்கிறியா என்று மிகுந்த விரக்தியில் பேசி இருக்கின்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மைக் மோகன் இப்படி எல்லாம் பேசாத இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பொருத்துக்க நாளைக்கு உனக்கு தகவல் சொல்றேன் என்று கூறி இருக்கின்றார்.

அந்த சமயத்தில் தான் ஒரு தயாரிப்பாளர் மைக் மோகனிடம் வந்து எனக்கு ஒரு படம் பண்ணி கொடுங்க என்று கேட்க உடனே மைக் மோகன் நீங்கள் மனோபாலாவை இயக்குனராக வைத்து படம் எடுத்தால் அந்த படத்தில் நான் நடிக்கிறேன். இதுதான் கண்டிஷன் என்று கூறிவிட்டாராம். உடனே அந்த ப்ரொடியூசரும் மனோபாலாவிடம் சென்று பேச மறுநாள் காரில் டிப்டாப் ஆக வந்து இறங்கி இருக்கின்றார் மனோபாலா.

இதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக மைக் மோகன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். மொத்தம் 18 நாட்கள் மோகன் கால் சீட் கொடுத்திருந்தார். அதற்கேற்றவாறு கதை அமைத்து ஒரு க்ரைம் தில்லர் கதையை உருவாக்கி இருந்தார். அந்த படம் தான் பிள்ளை நிலா. இந்த படம் 100 நாள் கடந்து மிகவும் வெற்றிகரமாக ஓடியது. மேலும் மனோபாலாவிற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் பிள்ளை நிலா. இந்த படத்திற்கு பிறகு மனோபாலாவிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைக்க தமிழில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் இயக்கி மிகச் சிறந்த இயக்குனராக வளம் வந்தார் மனோபாலா.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top