தப்ப முயன்றது ஏன்?… ஹோட்டல் அறையில் மர்ம மரணம்… காதலன் தப்பியோட்டம்… அடுத்த நொடியே பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்…!!

By Gayathri on ஐப்பசி 7, 2026

Spread the love

கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பயின்று வந்த மாணவி நிமிஷா தகுரியா, அசாரா புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் மர்மமான முறையில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்த மாணவியுடன் அதே அறையில் தங்கியிருந்த அவரது காதலரான ஆசிஃப் அலியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், போலீஸ் காவலிலிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற ஆசிஃப் அலியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்; இதில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.