வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டு உள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை முழுவதும் வெள்ள காடாக காட்சியளிக்கும் நிலையில் செய்தியாளர்கள் பலரும் இது குறித்த செய்திகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை பிரதான சாலையில் மழைநீர் தேங்கி இருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் லைவில் பேசிக் கொண்டிருந்தபோது துப்புரவு தொழிலாளர் ஒருவர் வாகனம் மோதி தண்ணீரில் கீழே விழுந்து தத்தளித்தார். ஆனால் சற்றும் அதை கண்டு கொள்ளாத செய்தியாளர் தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். தற்போது அந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…