Connect with us

எனக்கு அந்த நோய் இருக்கு, செத்துருவேன்னு தெரிஞ்சு என் பேன்ஸ் என்ன பாக்க வீட்டுக்கு வந்தாங்க.. மனமுடைந்து பேசிய மைக் மோகன்…

CINEMA

எனக்கு அந்த நோய் இருக்கு, செத்துருவேன்னு தெரிஞ்சு என் பேன்ஸ் என்ன பாக்க வீட்டுக்கு வந்தாங்க.. மனமுடைந்து பேசிய மைக் மோகன்…

80 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த மோகன் கடந்த 1980-ஆம் ஆண்டு ரிலீசான மூடுபனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். மகேந்திரன் இயக்கத்தில் மைக் மோகன் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மைக் மோகனின் திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டது. 80ஸ் காலகட்டத்தில் கமல், ரஜினிக்கு ஈடு கொடுக்கும் விதமாக மைக் மோகன் படங்களும் வெற்றி நடை போட்டது. சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன்.

அதன் பிறகு சினிமாவில் அடுத்தடுத்த சறுக்கல்களை சந்தித்தார். 1990-களில் சினிமாவிலிருந்து மைக் மோகன் விலகியிருந்தார். அப்போது அவருக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் மைக் மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து நான் இறந்து விட்டதாக கூறினார்கள். அதனை கேட்டு எனது ரசிகர்கள் பதறியடித்து வீட்டிற்கு ஓடி வந்தார்கள். எனக்கு மட்டும் இல்லாமல் எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அது பேர் அதிர்ச்சியாக இருந்தது.

   

 

அதன் பிறகு எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார்னு சில மீடியாவில் இருந்து வந்து கேட்டாங்க. நான் அதற்கு மறுத்து விட்டேன். ஏனென்றால் நீங்களே இருக்குன்னு சொல்லுவீங்க. இல்லன்னு நான் சொல்லனுமானு கேட்டேன். உண்மை என்னன்னு எனக்கு தெரியும். என் நண்பர்களுக்கு தெரியும். என் குடும்பத்தினருக்கும் தெரியும். அது உண்மையா இருந்தா தான் பீல் பண்ண முடியும். அதனால எனக்கு எந்த ஃபீலும் இல்லை. அந்த விஷயத்தை நினைத்து கவலைப்பட கூடாது. மத்தவங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என அந்த பேட்டியில் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. மைக் மோகன் நடித்த ஹரா திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 7-ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

author avatar
Archana
Continue Reading
To Top