இளையராஜா தன் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என விரும்பிய எம் ஜி ஆர்… கவிஞர் வாலி சொன்ன ஆச்சர்ய தகவல்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் யாரோடும் ஒப்பிட முடியாத ஆளுமை என்றால் அது எம் ஜி ஆர் தான். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக 1950கள் முதல் 78 வரை கோலோச்சிய அவர் அரசியலுக்கு வந்து 1977 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஆன பின்னர் சினிமாவில் இருந்து விலகினார். அவர் நடிப்பில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். அந்த படத்தை அவரே இயக்கியும் இருந்தார்.

எம் ஜி ஆர் சினிமாவை விட்டு விலகியதும் ரஜினி, கமல், பாரதிராஜா, இளையராஜா போன்ற புதிய கலைஞர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான காலமும் ஒன்றாக அமைந்தது. இதனால் இந்த கலைஞர்களில் கமல்ஹாசனை தவிர வேறு யாரும் எம் ஜி ஆரோடு இணைந்து பணியாற்றவில்லை.

   
60834a201dae4c001e14e09e

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் வந்து இளையராஜாவை பிரபலப்படுத்தியது. அப்போது அவரின் இசையால் கவரப்பட்ட எம் ஜி ஆர், தான் முதலமைச்சர் ஆனபின்னர் நடிக்க இருந்த ஒரு படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். அந்த படத்துக்கு கவிஞர் வாலியை கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுத கேட்டுள்ளார் எம் ஜி ஆர்.

இந்த படம் பற்றி வாலி அளித்த ஒரு நேர்காணலில் “எம் ஜி ஆர் என்னை அழைத்து நான் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றிருக்கிறேன். அந்த படத்துக்கு நீ கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுது. இசையமைப்பாளராக இப்போது புதிதாக வந்துள்ள தம்பி இளையராஜாவை ஒப்பந்தம் செய் என்று கூறினார். நானும் கதையெல்லாம் எழுதி ஒரு பாடலும் ரெக்கார்ட் செய்தோம்.

ilayaraja 759

இந்த தகவல் கேள்விபட்ட எம் எஸ் விஸ்வநாதன் அண்ணன், நான்தான் இளையராஜாவை எம் ஜி ஆர் படத்துக்கு புக் செய்தேன் என நினைத்து என்னைக் கோபித்து கொண்டார். ஆனால் அரசியல் காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.

author avatar