எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி அதை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம் ஜி ஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். இவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம்.
தன்னை ஆதரித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். அதேபோல் மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு அளவிட முடியாதது. அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
ஒருமுறை அண்ணா அரசியல் வேலைக்காக எம்ஜிஆரின் காரை வாங்கிக் கொண்டு திருச்சி வரை சென்றிருந்தார். அப்போது போகும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. அப்போது காரில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தார் அண்ணா. டிரைவர் நான் பெட்ரோல் வாங்க செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வயலில் வேலை பார்த்த அனைவரும் எம்.ஜி.ஆரின் கார் நிற்பதும் அதில் திமுக கொடி பறப்பதையும் பார்த்து அருகில் வந்து காருக்குள்ளே எம்ஜிஆர் இருக்கிறாரா என்று தேடினார்கள்.
அப்போது அண்ணா எம்ஜிஆர் வரவில்லை நான் மட்டும்தான் காரில் ஒரு அரசியல் ஒரு வேலைக்காக திருச்சி வரை செல்கிறேன். காரில் பெட்ரோல் இல்லை அதான் நின்றுவிட்டது என்று கூறியிருக்கிறார். அப்போது திமுகவின் தலைவராக அண்ணா இருந்த காலகட்டம் அது. உடனே அங்கு இருந்தவர்கள் பெட்ரோல் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். பிறகு அண்ணா பெட்ரோல்க்கான காசை கொடுத்த பிறகும் எம்ஜிஆர்காக நாங்கள் எதுவேனாலும் செய்வோம் இந்த காசெல்லாம் வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். இதை பார்த்து வியந்த அண்ணா மக்களுக்கிடையே எம்ஜிஆருக்கு இருந்த செல்வாக்கை புரிந்து கொண்டு எம்ஜிஆர் என்னுடைய இதயக்கனி என்று கூறியிருக்கிறார்.
திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…
பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…