Categories: சினிமா

136 படங்களில் எம்ஜிஆர் நடித்த ஒரே ஒரு மலையாள திரைப்படம்.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார்.  இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த எம்ஜிஆர் நடித்த 136 படங்களும் தமிழ் படங்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். மலையாளி ஆனா எம்ஜிஆர் நடித்த முதல் மற்றும் ஒரே படம் ஜெனோவா. 1953 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தை மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தனர். நாயகன் எம்ஜிஆர், நாயகி சரோஜா இருவரும் இரு மொழிகளிலும் நடித்தனர். வில்லனாக தமிழில் பி எஸ் வீரப்பா நடிக்க மலையாளத்தில் அந்த வேடத்தை ஆலப்பி வின்சென்ட் செய்திருந்தார். ஜெனோவா சஜாத்திர கதை. பொதுவாக இந்திய ராஜா ராணி கதைகளில் வருகிறவர்கள் இந்து கடவுள்களை கும்பிடுபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஜெனோவா கதையில் நாயகி ஜெனோவா கிறிஸ்த்துவர். மேரி மாதா முன் நின்று துணை நீயே தேவ தாயே என பாடும் காட்சியும் இந்த படத்தில் உண்டு. இந்த பணத்தில் எம்ஜிஆரின் பெயர் சிப்ரசோ , நாயகியின் பெயர் ஜெனோவா, எம்ஜிஆர் அண்ணன் சக்கரபாணியின் பெயர் அன்னாஸ். கதைப்படி எம்ஜி ஆர் ஒரு நாட்டின் அரசர். பக்கத்து நாட்டு இளவரசி ஜெனோவாவின் அழகையும் குணத்தையும் கேள்விப்பட்டு தனது அமைச்சர் மற்றும் பரிவாரங்களுடன் அவளை மணக்க செய்வார்.

அந்த சமயத்தில் இளவரசி தனது தோழிகளுடன் சென்று கொண்டிருப்பார். இதனை அறிந்து அவரை பார்க்க தனியாக குதிரையில் எம்ஜிஆர் துரத்தி செல்வார். அப்போது ஒரு விபத்து ஏற்பட அப்போது இளவரசையை எம்ஜிஆர் தான் காப்பாற்றுவார். தன்னை சாதாரண வீரனாக அறிமுகப்படுத்திக் கொண்டு பிறகு அவரை காதல் வசப்படுத்தி திருமணம் செய்து கொள்வது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் தான் எம்ஜிஆர் நடித்த ஒரே ஒரு மலையாள திரைப்படமாகும்.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

3 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

3 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

6 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

6 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago