Categories: சினிமா

இனிமேல் MGR சரோஜா தேவியோட நடிக்க மாட்டார்.. இதுதான் கடைசிப் படம்… பரவிய வதந்தியால் சூப்பர்ஹிட் ஆன படம்!

Spread the love

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமாவில் தன்னுடைய உச்சகட்டத்தில் இருக்கும்போதே ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணத்துக்குப் பிறகு சரோஜா தேவி சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கர்நாடகாவில் செட்டில் ஆனார்.

எம் ஜி ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்த சரோஜா தேவி அவரோடு பல படங்களில் இணைந்து நடித்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த ஒரு படம்தான் தெய்வப்பிறவி. இந்த படத்தில் அவர் நடித்த போது சிவாஜியோடு புதிய பறவை படத்திலும் நடித்து வந்துள்ளார். அப்படி நடித்துக்கொண்டு இருக்கும் ஒருநாள் ஷூட்டிங்குக்கு வராமல் புதிய பறவை ஷூட்டிங்கில் இருந்துள்ளார். இது எம்ஜிஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் வேறுவழியில்லாமல் அவர் வரும் வரை காத்திருந்து பின்னர் நடித்தாராம். ஆனால் அதற்குள் எம்ஜிஆர், சரோஜா தேவி மேல் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் இனிமேல் அவரை தன் படத்தில் ஒப்பந்தம் செய்யமாட்டார் என்றும் வதந்தி சினிமா வட்டாரத்தில் பரவ ஆரம்பித்து, எம் ஜி ஆர் ரசிகர்களிடமும் பரவியது.

இதனால் இந்த கூட்டணி பிரியப் போகிறார்களே என எம்ஜிஆர் ரசிகர்கள் “இதுதான் கடைசி படம்” எனப் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்துள்ளனர். இதனால் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து நடித்தனர். ஒரு வதந்தி கூட ஒரு படம் ஹிட் ஆக சிறிய அளவில்  பயன்பட்டுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

 

vinoth

Recent Posts

ரயிலை நோக்கி ஓடிவந்த நபர்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ… உறைந்துபோன நெட்டிசன்கள்…!

ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

2 minutes ago

“மூளை முதல் இதயம் வரை”… உடலில் ஒரு உறுப்பு கூட இல்லை… வெனிசுலாவில் பலியான இந்திய மாலுமி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…

31 minutes ago

“விஜய்க்கு வந்த மிகப்பெரிய சோதனை”…. ஆளுநரிடம் சிக்கிய 7 பக்க ரகசிய கடிதம்… திமுக போட்ட அதிரடி ஸ்கெட்ச்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…

41 minutes ago

BREAKING: ஒரே நேரத்தில் 15 தவெக MLA-க்கள் ராஜினாமா…. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி… நள்ளிரவில் உளவுத்துறை கொடுத்த அந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், தற்போதைய ஆட்சிக்கு எதிராக திரைக்குப் பின்னால் நடந்த ஒரு பெரும்…

47 minutes ago

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொலிரோ கார் கும்பல்… மதுரையில் நள்ளிரவு பயங்கரம்… திமுக பிரமுகர் கொலையில் திடுக்கிடும் பின்னணி…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இலுப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கலாநிதி, நள்ளிரவில் மர்ம கும்பலா மிகக்…

51 minutes ago