Categories: CINEMA

தூக்கில் தொங்குவது போன்ற காட்சி.. இன்னும் சில வினாடிகள் தாமதமாகியிருந்தால்.. ரிஸ்க் எடுத்து MGR நடித்த படம்..

தமிழ் திரையுலகில் 12 ஆண்டுகள் துண்டு துக்கடா வேடங்களில் நடித்து போராடி கதாநாயகன் ஆனவர் எம் ஜி ஆர்.  1935 ஆம் ஆண்டு வெளியான சதி லீலாவதி என்ற படத்திலேயே ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தியாகராஜ பாகதவரின் சில படங்களில் குறிப்பிடத்தகுந்த வேடத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் கதாநாயகனாக நடித்த படம் ஒன்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ராசியில்லாத ஹீரோ என்ற முத்திரையும் அவர் மேல் விழுந்தது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவருக்கு ராஜகுமாரி படத்தின் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதுவும் மீண்டும் ஹீரோவாக.

அதனால் இந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் அசத்திவிட வேண்டும் என நினைத்துள்ளார் எம்ஜிஆர். எல்லாக் காட்சிகள்லும் அர்ப்பணிப்போடு நடித்துள்ளார்.  அதிலும் ஒரு காட்சியில் தன் உயிரையே பணயமாக வைத்து ரிஸ்க் எடுத்து நடித்துளார்.

படத்தில் எம்ஜிஆரை சிறையில் அடைத்து இருப்பார்கள். எம்ஜிஆர் வாழ்க்கையே வெறுத்து ஒரு கட்டத்தில் அந்த அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலைக்கு  முயற்சிக்கும் காட்சி. அவர் தூக்கில் தொங்கி உயிர்விட முயற்சி செய்கிறார். அவரது எடை தாங்காமல் உத்தரம் உடைந்து விழுவது போல உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டும் உத்தரம் விழ நேரமாகி விட்டது.

எம்ஜிஆரின் உடலோ அந்தரத்தில் தொங்குகிறது. குரல்வளை நெரிக்கப்பட, கழுத்து வலப்பக்கம் திரும்புகிறது. எடை கீழாக இழுக்கிறது. உத்திரம் இன்னும் சில வினாடிகள் விழாமல் இப்படியே நீடித்தால் எம் ஜி ஆர் உயிரே போய்விடும் ஆபத்து. ஒரு வழியாக உத்தரம் உடைய  எம் ஜி ஆர் கீழே விழுகிறார்.  இப்படி தன் முதல் படத்திலேயே ரிஸ்க் எடுத்த எம் ஜி ஆர், தன்னுடைய கடைசி படம் வரை சண்டைக் காட்சிகளில் அதீத கவனம் எடுத்துக்கொண்டார்.

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கினார் எம் ஜி ஆர் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர்.

vinoth

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

9 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago