ஜெயலலிதாவை ஒதுக்கிய எம் ஜி ஆர்.. அடம்பிடித்து நடிக்க வைத்த இயக்குனர்- இறுதியில் படத்தின் ரிசல்ட் என்ன ஆச்சு தெரியுமா?!

By vinoth

Updated on:

தமிழ் சினிமா உலகில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கினார். 50 களில் தனது வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த எம் ஜி ஆர் அறுபதுகளில் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தை தொட்டார். அப்போது அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

எம் ஜி ஆரை அப்போது எதிர்த்து பேசும் அதிகாரம் பெற்றிருந்தவர்கள் சின்னப்ப தேவர், நடிகை பானுமதி மற்றும் நடிகர் எம் ஆர் ராதா உள்ளிட்ட சிலர்தான் பெற்றிருந்தார்கள். கதாநாயகிகளை பொறுத்தவரை ஒரு கட்டத்துக்கு மேல் தொடர்ந்து அவர்கள் தன் படங்களில் இருப்பதை எம் ஜி ஆர் விரும்பமாட்டார்.

   
MGR Jayalalitha movie

ஏனென்றால் அந்த ஜோடி ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும் என்பதால்தான். அப்படிதான் சரோஜா தேவி, ஜெயலலிதா, லதா, உள்ளிட்ட சில ஹீரோயின்கள் ஒரு கட்டம் வரை தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்தனர். இதில் ஜெயலலிதாதான் அவரோடு அதிக படங்களில் நடித்தவர். இருவரும் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் காவல்காரன் என்ற படத்தில் எம் ஜி ஆர் நடிக்க ஒப்பந்தமான போது அந்த படத்தில் கதாநாயகியாக ஜெயலலிதா இருக்க வேண்டும் என இயக்குனர் நீலகண்டன் விரும்பியுள்ளார். ஆனால் அப்போது ஏனோ ஜெயலலிதா மேல் அதிருப்தியில் இருந்த எம் ஜி ஆர், சரோஜாதேவியை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

jayalalithaa mgr alleged love affair

ஆனால் பிடிவாதமாக இயக்குனர் நீலகண்டன் ஜெயலலிதாதான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தாராம். எம் ஜி ஆர் அனுமதி இல்லாமலேயே ஜெயலலிதாவை வைத்து சில காட்சிகளையும் படமாக்கி விட்டாராம். அதனால் கோபத்தில் இருந்த எம் ஜி ஆர் வேறு வழியில்லாமல் காவல்காரன் படத்தில் நடித்தார்.

படம் ரிலீஸ் ஆனபோது எம் ஜி ஆரே எதிர்பார்க்காத விதமாக படம் சூப்பர் ஹிட் ஆகி எம் ஜி ஆர்- ஜெயலலிதா காம்போ மிகச் சிறப்பான வரவேற்பையும் பெற்றுள்ளது. அதன் பிறகு மேலும் சில படங்களில் இந்த ஜோடி இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

14cp Nadadodi