Connect with us

வர முடியாதுன்னு போய் சொல்லு.. கோபத்தில் எடுத்தெறிந்து பேசிய வாலி.. ஆனால் எம்ஜிஆர் செய்த செயல்..!

CINEMA

வர முடியாதுன்னு போய் சொல்லு.. கோபத்தில் எடுத்தெறிந்து பேசிய வாலி.. ஆனால் எம்ஜிஆர் செய்த செயல்..!

 

தமிழ் சினிமாவில் எப்படி அவர் எம்ஜிஆர் இருக்கு ஒரு பாடல் எழுதிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் வாலி. அதற்காக அலைந்து திரிந்து வாய்ப்புகளை தேடத் தொடங்கி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். எம்ஜிஆரின் ஆசான இயக்குனரான பா நீலகண்டன் அறிமுகம் கிடைக்க எம்ஜிஆரின் அரசியல் எண்ணத்தை தனது பாடல் மூலம் உணர்த்தியவர் வாலி.

எப்படி இவரால் மட்டும் முன்பே நடக்கக்கூடியதை கணிக்க முடிகின்றது இவர் ஒரு தீர்க்கதரிசி என்று வர்ணிக்க தொடங்கினர். அந்த சமயத்தில் எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞராகவே இருந்தார்  வாலி. எம்ஜிஆரின் பல திரைப்படங்களுக்கு வாலி பாடல் எழுதியிருக்கின்றார். அதுவரை கண்ணதாசன் தான் பெரும்பாலாக எம்ஜிஆர் படங்களுக்கு பாடல் எழுதி வந்த நிலையில் வாலியின் பாடல்கள் மிகவும் பிரபலமானதால் எம்ஜிஆருக்கு பெரும்பாலான பாடல்களை வாலியே எழுதத் தொடங்கினார்.

   

எம்ஜிஆர் மட்டுமல்ல சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பாடல்களை எழுதி இருக்கின்றார். கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளாக சினிமாவில் எனது பாடல் வரிகளால் ஆட்சி செய்த ஒரு கவிஞர். இவரை குறித்த ஒரு சம்பவத்தை சித்ரா லட்சுமணன் தனது பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார். ஒருமுறை வாலி தனது மனைவியின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

அப்போது மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் ஆப்ரேஷன் தான் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருந்தார் வாலி. அது மட்டுமில்லாமல் அவரின் மனைவிக்கு சரியாக ரத்தமும் கிடைக்காத காரணத்தினால் பயங்கர டென்ஷனில் இருந்தார். அப்போது எம்ஜிஆரின் பட இயக்குனர் ஒருவர் வாலிக்கு போன் செய்து நாளை ரெக்கார்டிங் இருக்கின்றது.

நீங்கள் கட்டாயம் வரவேண்டும் கண்ணதாசன் அவர்களும் வந்துவிடுவார் என்று கூறியிருக்கின்றார். இதைக்கேட்ட வாலி இல்லை என் மனைவிக்கு பிரசவ வலி வந்திருக்கின்றது. அதனால் நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள் என்று கூற நீங்களா ஆபரேஷன் செய்யப் போகிறீர்கள் வந்து பாடலை எழுதிக் கொடுங்கள் என்று கண்டிப்புடன் பேசி இருக்கின்றார் அந்த இயக்குனர்.

இதனால் மிகுந்த கோபமடைந்த வாலி சரமாரியாக திட்டி இருக்கின்றார். மேலும் நான் சொன்னதை அப்படியே எம்ஜிஆர் இடமும் பொய் சொல்லி விடு என்று கூறியிருக்கின்றார். பின்னர் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து வாலியின் மனைவியும் குழந்தையும் நன்றாக இருந்தனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த எம்ஜிஆர் என்ன கூறி இருப்பார் என்று நாம் எண்ணி இருப்போம்.

ஆனால் அதற்கு மாறாக வாலியை அழைத்து இயக்குனர் அப்படி பேசியது மிகப்பெரிய தவறு. உங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டார். எனக்கு ஒரு அவசரமும் இல்லை நீங்கள் எப்போது வந்து பாடலை எழுதி தருகிறீர்களோ அப்போது வரை நான் காத்திருக்கிறேன் என்று கூறினாராம். மேலும் அவரது மனைவிக்கும் குழந்தைக்கும் ஒரு தங்க நாணயத்தை கொடுத்து விட்டு சென்றாராம் எம்ஜிஆர்” இதனை அந்த பேட்டியில் நினைவு கூர்ந்து இருக்கின்றார் சித்ரா லட்சுமணன்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top