#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் MGR.
குடும்ப வறுமைக்காக சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட MGR நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிகராக ஆனார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார் MGR.
MGRரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். MGR படங்கள் என்றாலே ஹிட்டுதான். அந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் MGR .
என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் MGR. மிகவும் எளிமையாக பழகக் கூடியவர். அப்படி சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு முறை அனைவரையும் உற்சாகப்படுத்த பாயசம் சாப்பிடும் போட்டியை அறிவித்தார். யார் அதிகமாக சாப்பிடுகிறார்கள் அவர்களைவிட ஒரு கப் அதிகமாக நான் பாயாசத்தை குடிப்பேன் என்று போட்டியை அறிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் நன்றாக விளையாடினர். ஒரே ஒருவர் 12 கப் பாயசத்தை குடித்து முன்னிலையில் இருந்தார். அப்போது அவரை முறியடிக்க எம்ஜிஆர் பாயாசத்தை வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார். அப்போது அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீதரோ மிகவும் கவலையடைந்தார். இவ்வளவு பாயாசத்தை கொடுத்து எம்ஜிஆர் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது படபிடிப்பு நிறுத்த வேண்டுமே என்று கலங்கினார்.
அப்போது ஸ்ரீதர் பாயசம் ஊத்துபவரிடம் கண்ணைக்காட்டி கப்பில் குறைவாக ஊத்தும்படி கூறினார். ஆனால் அதை கவனித்த எம்ஜிஆர் அப்படி செய்யக்கூடாது எனக்கு முழு கப்பையும் ஊத்துங்க என்று நேர்மையாக விளையாடி 12 கப்புக்கு கூட ஒரு கப்பக 13 கப் குடித்து போட்டியில் ஜெயித்தார். அப்படி நேர்மையான மனிதராக இருந்திருக்கிறார் எம்ஜிஆர்.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…