Connect with us

பாடலுக்கு வரிகள் கிடைக்காமல் தடுமாறிய வாலி.. எம்.ஜி.ஆர் கொடுத்த ஒரு டம்பளர் பாயாசத்தால் உருவாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்த பாடல்..

CINEMA

பாடலுக்கு வரிகள் கிடைக்காமல் தடுமாறிய வாலி.. எம்.ஜி.ஆர் கொடுத்த ஒரு டம்பளர் பாயாசத்தால் உருவாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்த பாடல்..

 

கலைஞர்களை தாண்டி ஒரு கவிஞருக்கு ஒரு பாடலுக்கான வரிகளை பிடிக்க வேண்டும் என்றால் அதற்காக அவர்கள் மனதில் கலக்கம் இல்லாமல் அந்த நிலைமைக்கு ஏற்றார் போல வரிகளை கொண்டு வர வேண்டும். சில சமயங்கள் எந்த மெனக்கெடலும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் போதும் அவர்களுக்கு வரிகள், வார்த்தைகள் தோன்றும். சில சமயங்களில் சில மனிதர்களால் அவர்கள் திணறும் நேரத்தில் சரியான வரிகளை பிடிப்பர். அப்படி வாலிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த ஒரு கப் பாயாசத்தால், பாட்டுக்கு வரி கிடைக்காமல் திணறிய வாலிக்கு வரிகள் வந்து விழ, அந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

#image_title

   

1964-ம் ஆண்டு டி.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளியான படம் படகோட்டி. 2 மீனவ கிராமங்களுக்கு இடையில் நடக்கும் மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில், சரோஜா தேவி, நம்பியார், நாகேஷ், மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருப்பார். இந்த படத்திற்கு பிறகுதான் வாலி இனி தன் படங்களின் பாடல்களை எழுதுவார் என்று எம்.ஜி.ஆர் அறிவித்திருந்தார். அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் ‘’கொடுத்தெலலாம் கொடுத்தான்’’ என்ற பாடல் இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் வரிகள் அமைந்திருக்கும்.

#image_title

இந்த படத்திற்காக பாடல் எழுத சத்யா ஸ்டூடியோவிற்கு கவிஞர் வாலி வந்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு பாடல் எழுதுவதற்காக சரியான சொற்கள் கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் சென்று, பாடல்கள் இன்னும் எழுதவில்லை என்று காரணத்தை சொல்ல, அவரோ ஒரு டம்பளர் அவல் பாயாசத்தை கொடுத்துவிட்டு, இதை குடியுங்கள் அப்புறம் பாடலை முடியுங்கள் என்று கூறியுள்ளார். இதன்பிறகு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு பணிக்கு செல்ல, அங்கிருந்தவர்கள் வாலியிடம், என்ன பாயாசம் சாப்டீங்களா என்று கேட்க, உங்களுக்குமா கொடுத்தார் என்று வாலி கேட்டுள்ளார்.

#image_title

அதற்கு அவர்கள் எங்களுக்கு மட்டுமா கொடுத்தார் இங்கிருக்கும் அனைவருக்கு கொடுத்தார். ஊருக்கே கொடுத்தவர் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வாலிக்கு சட்டென்று பாடல் வரிகள் சிக்கியது. உடனடியாக எம்.ஜி.ஆரிடம் சென்று சொல்ல, அவரே பாடல் அற்புதம். அடுத்த வரி எழுதுங்கள் என்று தட்டி கொடுத்துள்ளார். அப்படி எம்.ஜி.ஆர் கொடுத்த ஒற்றை டம்ளர் பாயாசத்தால் வந்த பாடல் தான் ‘’கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காக கொடுத்தான்’’ என்ற பாடல். இந்த பாடல் வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர் வாரி கொடுக்கும் வள்ளல் என்பதை பலருக்கும் உணர்த்திய ஒரு பாடலாக அமைந்துள்ளது.

#image_title

author avatar
Archana
Continue Reading
To Top