MGR தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அவரைப் போல் ஒரு நடிகன் இல்லை. அவரைப் போல் ரசிகரை கொண்டுவரும் இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சர் ஆகவும் சிறப்பாக ஆட்சி நடத்தி தமிழக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR .
குடும்ப வறுமையின் காரணமாக நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் நடிகராக உயர்ந்தவர். இவரது திரைப்படங்கள் ஆக்சன் அதிரடி திரைப்படங்களாக இருக்கும். சமூக நீதி கருத்துக்களும் திராவிட சிந்தனைகளும் இவரது படங்களில் அதிகமாக இருக்கும். பல நடிகைகளுடன் இணைந்து MGR நடித்திருக்கிறார். அதில் ஒருவர் தான் சரோஜாதேவி.
சரோஜாதேவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சரோஜாதேவி. கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர் சரோஜாதேவி. தமிழில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சரோஜாதேவி. MGR உடன் மட்டுமே இணைந்து 26 படங்களுக்கு மேல் நடித்ததிருக்கிறார் சரோஜாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு தடவை MGRரும் சரோஜா தேவியும் இணைந்து நடித்த திரைப்படம் திருடாதே. இந்த திருடாதே திரைப்படத்தின் சூட்டிங்கின் போது சரோஜாதேவி காலில் கண்ணாடி குத்தி ரத்தம் வழிந்ததாம். அதை பார்த்த உடனே பதறிய MGR சரோஜாதேவியின் காலை தனது தொடை மேல் தூக்கி வைத்து தனது கைக்குட்டையால் ரத்தத்தை துடைத்து முதலுதவி செய்தாராம். அப்போது சரோஜாதேவி தமிழில் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லையாம். ஆனாலும் உதவி மனப்பான்மை கொண்ட MGR இந்த மாதிரி செய்தது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரையும் நெகிழச்செய்து இருக்கிறது.