என் பிறந்தநாளுக்கு MGR கொடுத்த கிப்ட்.. இப்பவும் அது என்கிட்ட இருக்கு.. சீக்ரெட்டை சொன்ன நடிகை லதா..!!

By admin on புரட்டாதி 26, 2024

Spread the love

பிரபல நடிகரான எம்.ஜி.ஆர் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர். எம்.ஜி.ஆர் தனது படங்கள் மூலமாக பல நடிகைகளை அறிமுகம் செய்துள்ளார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடிகை லதாவை எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்தார்.

எம்.ஜி.ஆர் பரிசாக தந்த வைரக் கல் மோதிரம்: நடிகை லதா நினைவுகள்

   

இந்த படத்தில் லதா தேர்வாகிய போது எம்.ஜி.ஆர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். நான் பல நடிகைகளை அறிமுகம் செய்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் பெரிய ஹீரோயின் ஆன பிறகு என்னுடைய படங்களில் நடிக்க அவர்களிடம் கால்ஷீட் கேட்டு நானே காத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் அடுத்த ஐந்து வருஷத்துக்கு எனக்கு கால்சீட் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் கான்ட்ராக்டிலும் கையெழுத்து வாங்கியுள்ளார்.

   

 

இந்த நிலையில் லதா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, என் பிறந்தநாளில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்கிட்ட பிறந்தநாளுக்கு உனக்கு என்ன வேணும் அப்படின்னு கேட்டாரு. நான் அவர்கிட்ட மோதிரம் வேணும்னு சொன்னேன். பிரேக் டைம்ல மோதிரம் வாங்கிட்டு வர சொன்னாரு. அதுக்கப்புறம் 3 கல் வெச்ச வைர மோதிரத்தை எனக்கு கொடுத்தாரு. அந்த மோதிரத்தை நான் இப்பவும் வச்சிருக்கேன்.

எங்க அம்மா தான் எனக்கு எப்பவுமே நகை வாங்கிட்டு வருவாங்க. எனக்கு இப்ப கூட அதுல இன்ட்ரஸ்ட் கிடையாது. என் பசங்க கூட என்கிட்ட அம்மா உனக்கு என்ன கிப்ட் வேணும் அப்படின்னு கேட்பாங்க. நான் ஒண்ணுமே வேண்டாம்னு சொல்லிடுவேன். அதுக்கப்புறம் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி ஏதாவது வாங்கி தருவாங்க. சில பரிசுகள் வாழ்க்கையில் மறக்க முடியாது. அதிமுக தேர்தல் நேரத்துல எம்ஜிஆர் அவர் கையால எனக்கு பெரிய நடராஜர் சிலை கொடுத்தார். அதை என்னால மறக்கவே முடியாது என நடிகை லதா கூறியுள்ளார்.

முடியாத நேரத்திலும் கூட எம்.ஜி.ஆர் என்னிடம் கனிவாக நடந்து கொண்டார்" நடிகை  லதா கண்ணீர் பேட்டி! - Tamil Spark