தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்து இருப்பவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனி பாதையை உருவாக்கி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அதன் வழி நல் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

வறுமையால் வாடிய எம்ஜிஆர் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று நடிகராக உயர்ந்தார் எம்ஜிஆர். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் இவரை மக்கள் வெகுவாக ரசித்தனர்.
எம்ஜிஆர் படங்கள் வெளி வந்தாலே ஹிட்தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியல் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் தன்னை நாடி யார் இல்லை என்று வந்தாலும் கை நிறைய அள்ளிக் கொடுப்பவர். அதற்கு பல சம்பவங்கள் சான்றாக இருக்கிறது. அதில் ஒன்றை இனி காண்போம்.
எம்ஜிஆர் படத்தின் ஒரு படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியின் போது அவரது கால் உடைந்தது. அப்போது மருத்துவமனையில் இருந்தார் எம்ஜிஆர். அவரை காண இரண்டு கண் தெரியாத மாற்றத்திறனாளிகள் அவரை பார்க்க வந்தனர். அவர்களை பார்த்து பதறிய எம்ஜிஆர் ஏனைய்யா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே அந்த பார்வையே இல்லாத மாற்று திறனாளி நபர்கள் உங்களை பார்க்க தான் ஐயா வந்தோம் என்று கூறினார்கள். உடனே எம்ஜிஆர் இரக்க குணத்துடன் பரிதாபமாக என்னை பார்க்கவா என்று கேட்டிருக்கிறார்.

உடனே அந்த பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி நபர்கள் ஐயா நீங்க கேட்கிறது எங்களுக்கு புரியுது. எங்களது புறக்கண்ணால் உங்களை பார்க்க முடியாது ஆனால் எங்களின் மனக்கண்ணை வைத்து உங்களை காண இயலும் உங்களை தொட்டு உங்களை நலம் விசாரித்து உங்களுக்காக ஆண்டவனை நாங்கள் வேண்டிக் கொள்ளலாம் என்று தான் ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கிறோம் என்று கூறினார். அதைக் கேட்டு மிகவும் மனம் நெகிழ்ந்து போய்விட்டார் எம்ஜிஆர். அத்தனை தூரம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்.
