Connect with us

CINEMA

ரஜினிக்காக குழிககுள் வைத்த உடலை எடுத்துக்காட்ட சொன்ன எம்ஜிஆர்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக்கிங் தகவல்..

புரட்சித் தலைவர் இறந்துவிட்டாலும், அவரது புகழ் இன்னும் எப்போதும் போல வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த மண்ணை விட்டு மறையும் போது எந்தளவுக்கு புகழில், மக்கள் செல்வாக்கில் இருந்தாரோ அதே புகழும்.

செல்வாக்கும் இப்போதும் அவருக்கு இருக்கிறது என்பதுதான் காலத்தின் சரித்திரமாக இருக்கிறது. இதற்கு ஒரே ஒரு உண்மையான காரணம், அவர் மக்கள் தலைவராக இருந்தார். மக்கள் விரும்பும் நடிகராக இருந்தார். மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் எப்போதும், மக்களின் மனங்களை விட்டு மறைவதே இல்லை.

   

புரட்சித் தலைவர் எம்ஜிஆரிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி உதவியாளராக இருந்தவர் சபாபதி. எப்போதுமே எம்ஜிஆரின் நிழலாக இருக்க கூடியவர். எம்ஜிஆரின் அலுவலக பணிகளிலும், அன்றாட செயல்பாடுகளிலும் உதவியாக இருந்தவர். அவரை ஒருபோதும் எம்ஜிஆர் தனது உதவியாளர் என்று சொன்னது இல்லை. தனது உடன்பிறவா சகோதரர் என்றுதான் சபாபதியை மற்றவர்களிடம் கூறுவது எம்ஜிஆரின் பெருந்தன்மையான பழக்கம்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில், சபாபதியின் மகன் பாஸ்கர் கூறியதாவது, அப்பா இறந்துவிட்டார். அவரது உடல் குழிக்குள் வைக்கப்பட்டு விட்டது. கடைசி நேரத்தில் அங்கு ரஜினிகாந்த் வந்து சேருகிறார். சபாபதி உடலை தொட்டு பார்க்க வேண்டும். முகத்தை பார்த்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்கிறார். ஏனெனில் ரஜினிகாந்த் அப்பா மீது நிறைய அன்பு கொண்டிருந்தார். அவரை ரொம்ப படிக்கும். குழிக்குள் வைத்த உடலை வெளியே எடுக்க கூடாது என்று அங்கு இருந்தவர்கள் சொல்ல சலசலப்பு ஏற்படுகிறது.

அப்போது அங்கிருந்த எம்ஜிஆர் என்னவென்று விசாரிக்க, தகவல் சொல்லப்பட்டது. அதனால் ஒன்றும் தப்பில்லை. பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். வெளியே எடுத்து ஒருமுறை வைத்து காட்டிவிடுங்கள் என அனுமதி தர, உடனே அப்பாவின் உடல் குழிக்குள் இருந்து எடுக்கப்பட்டு, ரஜினி இறுதி அஞ்சலி செலுத்திய பின் குழிக்குள் வைத்து மூடப்பட்டது என, சபாபதியின் மகன் பாஸ்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top