இயக்குனரின் காரை அடித்து அப்பளம் போல ஆக்கிய எம்.ஜி.ஆர் ரசிகர்களால். அடப்பாவமே இதுக்காகவே?

By Soundarya on தை 25, 2025

Spread the love

கேஸ் பாலகிருஷ்ணன் கமல், சிவக்குமார் இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுத்தாராம். இந்த படத்துக்கு முன்பாக அவர் அதை எம்ஜிஆர் வைத்து தான் எடுப்பதாக இருந்தாராம். அந்த வகையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசியது எம்ஜிஆர் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது. அதாவது, தமிழில் தங்கத்தில் வைரம் என்ற ஒரு படம். அதில் கமல், சிவகுமார் நடித்திருந்தார்கள். இந்த படத்துக்கு ஹீரோவாக முதலில் அறிவிக்கப்பட்டது எம்ஜிஆர் தானாம். கே.எஸ் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பணமா? பாசமா?

   

ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் ஜோடியாக நடித்த அந்த படம் வெளியான அதே நாளில் வெளியான எம் ஜி ஆர் படம் தேர்த்திருவிழா. இந்த படத்தில் எம்ஜிஆர் ஜோடி ஜெயலலிதா .பணமா? பாசமா? படத்தை பொருத்தவரைக்கும் மிகப்பெரிய வசூலை அள்ளியதாம். அந்த படத்தின் விழாவில் சமீபத்தில் வெளியான மற்ற படங்களின் வசூலை எல்லாம் முறியடித்துவிட்டு பணமா? பாசமா? வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறது என்றாராம் கே.எஸ் பாலகிருஷ்ணன்.

   

 

அந்த பேச்சை ம்ஜிஆர் உடைய ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம். அப்பளம் போல நொறுக்கப்பட்டிருந்ததாம் கே எஸ் பாலகிருஷ்ணனின் கார். இந்த பேச்சு எம்ஜிஆர் அரசின் மத்தியில் கொந்தளிக்க செய்தது அது மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிந்தும் மிகுந்த பாதுகாப்போடு அவர் தங்கியிருந்த இடத்திற்கு கே எஸ் பாலகிருஷ்ணனை திரையரங்கின் உரிமையாளர் அழைத்து சென்றாராம் .

ஒரு வாரத்திற்கு வெளியில் தலை காட்டாதீர்கள் என்றும் அவருக்கு அறிவுரை சொன்னாராம். இந்த பிரச்சினையில் எம்ஜிஆர் ரசிகர்களை அமைதி படுத்த வேண்டும் என்றால் எம்ஜிஆர் படத்தை நீங்க இயக்க போகிறீர்கள் என்று ஒரு செய்தியை வைத்தால் தான் நல்லது என்று கூறியதால் கே எஸ் பாலகிருஷ்ணன் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாராம். இதை பேட்டி ஒன்றில்  பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.