Connect with us

MGR-ஆல் வாழ்ந்தவர் பலர்… ஆனால் வீழ்ந்தவர் சந்திரபாபு.. இதற்க்கு காரணமே அந்த ஒரு விஷயம் தான்..

CINEMA

MGR-ஆல் வாழ்ந்தவர் பலர்… ஆனால் வீழ்ந்தவர் சந்திரபாபு.. இதற்க்கு காரணமே அந்த ஒரு விஷயம் தான்..

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது  அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான்.

சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர். வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது.

   

ஆனால் அவருக்கும் எம் ஜி ஆருக்கும் இடையில் நடந்த ஒரு மோதலும் அவரின் பொருளாதார ரீதியாக நொடித்துப் போக காரணமாக அமைந்தது. எம் ஜி ஆரின் நெருங்கிய நண்பராக இருந்த சந்திரபாபு, அவரை பெயர் சொல்லி அழைக்கும் ஒருசிலரில் ஒருவர். அதுமட்டுமில்லாமல் அவரை நேருக்கு நேர் கடுமையாக விமர்சிக்கும் குணமும் கொண்டிருந்தார்.

 

இதனால் எம் ஜி ஆருக்கு சந்திரபாபு மீது ஒரு அதிருப்தி இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சந்திரபாபு எம் ஜி ஆரை வைத்து மாடிவீட்டு ஏழை என்ற திரைப்படத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக எம் ஜி ஆருக்கு மிகப்பெரிய தொகையை முன்பணமாகவும் கொடுத்துள்ளார்.

ஆனால் ஷூட்டிங் நினைத்தபடி நடக்கவில்லை. எம் ஜி ஆர் ஒழுங்காக ஷூட்டிங்குக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை. இதற்கிடையில் வாங்கிய கடனால் வட்டி அதிகமாகி சந்திரபாபுவின் புதிய வீடு கடனில் மூழ்கியுள்ளது. இதனால் கோபமான சந்திரபாபு எம் ஜி ஆரை சென்று சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளார். அவரிடம் என் அண்ணனிடம் பேசிக்கொள்ளுங்கள் எனக் கூறி சென்றுள்ளார்.

இது சம்மந்தமாக எம் ஜி ஆரின் அண்ணன் எம் ஜி சக்ரபாணியிடம் பேசும்போது இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டு நாற்காலியை தூக்கி அடிக்கும் அளவுக்கு சென்றுள்ளார் சந்திரபாபு. இந்த விவகாரம் திரையுலகம் முழுவதும் பரவி சந்திரபாபுவின் பெயர் கெட்டுப்போயுள்ளது. அதன் பிறகு மாடி வீட்டு ஏழை என்ற அந்த திரைப்படம் முடங்கியது. இதனால் பெரும் கடனுக்கு ஆளான சந்திரபாபு, அந்த பிரச்சனை காரணமாகவே அதிகமாகக் குடிக்க ஆரம்பித்து உடல்நிலையைக் கெடுத்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு அவரால் எழவே முடியவில்லை என சொல்லப்படுகிறது.

Continue Reading
To Top