இலங்கையில் பிறந்த எம்ஜிஆர் தமிழகத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களில் அறிமுகமாகி 1935 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக திரையுலகில் துணை நடிகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் முக்கியத்துவமான மற்றும் துணை நடிகராக நடித்திருந்த எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு சண்டைக் காட்சிக்காக மட்டுமே நடித்துள்ளார். 10 வருட இடைவேளைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு ஹீரோவாக உயர்ந்தார். ஹீரோவாக பல வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த எம்ஜிஆர் ஒரு கட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக களம் இறங்கி நாடோடி மன்னன் என்ற படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வளம் வந்த எம்ஜிஆர் அரசியலிலும் தன்னை தடம் பதித்து கொண்டார்.

தமிழ் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். தன் வாழ்நாளில் பாதி வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாள் அப்போது பிரபலமாக இருந்த பிரபல இயக்குனர் கே. சுப்பிரமணியத்தை பார்க்க எம்.ஜி.ஆரும் அண்ணன் சக்கரபாணியும் சென்று இருந்தனர். அந்த இயக்குனர் அக்காலகட்டத்தில் திரை உலகின் தந்தை என்று அழைக்கப்பட்டு இருக்கிறார். அக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜர் பாகவதரை அறிமுகப்படுத்தியது அந்த இயக்குனர் தான்.

அவர் மனைவி டி எஸ் சுப்புலட்சுமி. அவரும் ஒரு பிரபல நடிகை தான். அவருடன் நடிகர் தியாகராஜன் பாகவதர் நடித்த நவீன சாரங்கதாரா என்ற படம் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தை எம்ஜிஆர் பலமுறை பார்த்து உள்ளார். எனவே அந்த இயக்குனரை பார்த்தால் தனக்கு ஒரு எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார் எம்ஜிஆர். அந்த இயக்குனர் எம்ஜிஆரை பார்த்து பேசி விட்டு மறுநாள் வருமாறு சொல்லி அனுப்பியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த எம்ஜிஆர் அவ்வளவு பெரிய இயக்குனரை பார்ப்பது எளிது மட்டுமல்ல அப்படி பார்த்தாலும் வாய்ப்பு கிடைப்பது அரிது என்பதை அறிந்தார். தன்னை அவர் சந்திக்க வரச் சொல்லியதை தன் அம்மாவிடம் கூறி எம்ஜிஆர் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார்.
