”சாவித்ரிய படத்துல இருந்து தூக்குங்க, ஒங்க ஆளுங்களுக்குலாம் படம் எடுக்க தெரியாது”.. சந்திரபாபுவை அவமானப்படுத்திய MGR-ன் அண்ணன்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது  அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த சந்திரபாபு எம் ஜி ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்ற படத்தை எடுத்தார். அந்த படம்தான் அவரின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.

இந்த படத்தை தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கி தொடங்கினார். 2000 அடி படம் ஷூட் பண்ணிய போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு சந்திரபாபு எவ்வளவோ முயற்சித்தும் எம் ஜி ஆர் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். ஒரு நாள் இது சம்மந்தமாக பேச எம்ஜிஆரின் அண்ணன் சக்ரபாணியை சந்திக்க சென்றுள்ளார்.

   

சந்திரபாபுவிடம் எம் ஜி சகர்பாணி பேசும்போது “சாவித்ரி ரொம்பவும் குண்டாகிவிட்டார். அதனால் அவருக்கும் எம் ஜி ஆருக்கும் ஜோடி பொருத்தம் சரியில்லை. அதனால் அவரை மாற்றவேண்டும்” எனக் கூறியுள்ளார். சினிமாவில் தனக்கிருந்த நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாவித்ரியை நீக்க முடியாது என சந்திரபாபு பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் சந்திரபாபுவுக்கும் சக்ரபாணிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

ஒரு கட்டத்தில் சக்ரபாணி சந்திரபாபுவை சாதிப் பெயர் சொல்லி இழிவுபடுத்தி பேசி “உங்க சாதிக்காரங்களுக்கு எல்லாம் படம் எடுக்கத் தெரியாது” எனக் கூறியுள்ளார். இதனால் கடுப்பான சந்திரபாபு நாற்காலியைத் தூக்கி அவரை அடிக்க சென்றுள்ளார். இந்த சம்பவம் தமிழ் சினிமா உலகம் முழுவதும் பரவி விட்டது. எம் ஜி ஆர் அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவேயில்லையாம். எம் ஜி ஆரைப் பகைத்துக் கொண்டதால் சந்திரபாபுவுக்கு சினிமா வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்துள்ளது. வீட்டின் மேல் வாங்கிய கடனால் அந்த வீடும் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை சந்திரபாபுவின் தம்பி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.