Categories: சினிமா

ஒரு அறை முழுக்க மைசூர் சில்க் புடவைகள்.. எது வேணும்னாலும் எடுத்துக்கோனு நடிகைக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எம்ஜிஆர்..

Spread the love

நடிகர் எம்ஜிஆருக்கு கொடைவள்ளல் என்றொரு பெயர் உண்டு. எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கு, நான் அளவோடு ரசிப்பவன் என்ற பாடல் வரியை எழுதிவிட்டு அடுத்த வரி என்ன எழுதலாம் என்று கவிஞர் யோசித்த போது, அருகில் இருந்த கருணாநிதி, எதையும் அளவின்றி கொடுப்பவன் என்று எழுதுங்கள் என்று சொன்னாராம். அப்படி யாருக்கும் எதுவும் இல்லை என்று தன் வாழ்வில் சொல்லாமல் அளவின்றி செய்தவர் எம்ஜிஆர். அவருடன் பல படங்களில் நடித்தவர் நடிகை லதா. உலகம் சுற்றும் வாலிபன் என்ற தனது சொந்த தயாரிப்பு படத்தில், எம்ஜிஆரே டைரக்ட் செய்த அந்த படத்தில் லதாவை அறிமுகப்படுத்தினார். அந்த படத்தின் மாபெரும் வெற்றியால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் லதா. பிறகு எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் எம்ஜிஆர் நினைவலைகள் குறித்து நடிகை லதா கூறியதாவது, சின்ன வயதில் எந்த பாட்டை போட்டாலும் நான் டான்ஸ் ஆடி விடுவேன். அதனால் நடன நிகழ்ச்சிகளில், நாடக மேடைகளில் ஆடுவேன். அதை பார்த்துதான் எம்ஜிஆர் என்னை நடிக்க அழைத்தார். ஆனால் என் அம்மா சம்மதிக்கவில்லை. உங்கள் பெண்ணை கவனமாக பார்த்துக்கொள்கிறேன். நல்ல நடிகையாக மாற நானே பயிற்சி அளிக்கிறேன். ராஜ குடும்பத்தை சேர்ந்த உங்களுக்கு எந்த அவப்பெயரும் வராதபடி லதா நல்ல நடிகையாக வருவாள் என உறுதியளித்து என்னை நடிக்க வைக்க, என் அம்மாவை சம்மதிக்க வைத்தார். 15 வயது பெண்ணாக வந்த எனக்கு, நடிக்கவும், வசனங்களை உச்சரிக்கவும் என நிறைய கற்றுக்கொடுத்தார். அவரிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக பிறருக்கு உதவுகிற அவரது உயர்ந்த குணத்தை நான் பின்பற்றுகிறேன்.

நானும் எம்ஜிஆரும் நடித்த உழைக்கும் கரங்கள் என்ற படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. அப்போது அந்த படத்தின் டைரக்டர் சங்கரிடம் நான் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு போகணும், மைசூர் சில்க்ஸ் புடவைகள் வாங்கணும் என்றேன். அவர் நாளை மதியத்துக்குள் ஷூட்டிங் முடிக்கணுமே என்று சொல்லி அதற்கு அனுமதிக்கவில்லை. அப்போது என்னை அழைத்த எம்ஜிஆர், காரில் ஏறு கோவிலுக்கு போ என்று என்னை அனுப்பி வைத்தார். நான் கோவிலுக்கு போய்விட்டு திரும்பி வந்த போது, ருமூக்கு வா என்று அழைத்தார். நான் அங்கு சென்றேன். அப்போது அங்கிருந்த ஒரு அறையை திறந்த போது, ரூம் முழுக்க மைசூர் சில்க்ஸ் புடவையாக இருந்தது. நீ புடவை வேணுமுன்னு கேட்டுகிட்டு இருந்தே, பார்க்க பாவமா இருந்தது. வேணுங்கிற அளவுக்கு புடவைங்களை எடுத்துக்கோ, அப்படியே ஜானகி ( எம்ஜிஆர் மனைவி)க்கும் நிறைய எடுத்துக்கோ என்று கூறினார். இதுபோன்ற உயர்ந்த குணத்தை எல்லாம் யாரிடமும் பார்க்க முடியாது, என்று கூறியிருக்கிறார் நடிகை லதா.

admin

Recent Posts

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

5 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

2 மணத்தியாலங்கள் ago