mgr

அன்பே வா படப்பிட்டிப்பில் MGR செய்த செயல்… எளிமையாக நடந்து தயாரிப்பாளரை ஆச்சர்யமடைய செய்த புரட்சி தலைவர்…

By admin on கார்த்திகை 13, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தாவர் MGR.

   

MGRரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் க்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR .

   

தான்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR நடிக்கும் போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி நடத்தினார். தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராகவே இருந்து மறைந்தார் MGR.

 

MGR ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல். தன்னை தேடி யார் எது கேட்டு வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து அனுப்புபவர் MGR. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் மிக எளிமையாக இருந்தவர் MGR .அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருந்திருக்கிறது.

ஏவிஎம் ப்ரொடக்சன் தயாரிப்பில் எம்ஜிஆர் அன்பே வா என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் சூட்டிங் சிம்லாவில் நடந்தது. அப்போது ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு குளிர் தாங்காமல் உடம்பு சரியில்லாமல் போயிருக்கிறது. சூட்டிங் நடைபெறும் இடத்தில் காருக்குள் அமர்ந்திருந்து ஏவிஎம் சரவணன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது டீ பிரேக் என்பதால் அனைவரும் டீ குடிக்க சென்றுவிட்டனர். ஆனால் எம்ஜிஆர் மட்டும் ஃப்ளாசில் ஏவிம் சரவணனுக்கு பால் வாங்கி கம்பளியால் மூடி அவரே கையால் கொண்டு வந்து காரில் வந்து கூப்பிட்டு இருக்கிறார். உடனே பதறிய ஏவிஎம் சரவணன் அய்யா நீங்க ஏன் எடுத்துட்டு வரீங்க வேலையாட்களிடம் கொடுத்து விடலாம்ல அப்படின்னு கூறியிருக்கிறார். வேற யாரையாவது கொடுத்தா நீங்க குடிக்க மாட்டீங்க அதான் நான் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார் MGR. இதைக் கேட்ட ஏதேனும் சரவணன் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார். அப்படி தான்தான் உயர்ந்தவர் என்று எண்ணம் இல்லாமல் எளிமையாக இருந்திருக்கிறார் MGR.