குண்டடிபட்டு மருத்துவமனையில் இருந்த போது எம்.ஜி.ஆர் கேட்ட கேள்வி… கதறி அழுத சிவகுமார்.. அப்படி என்ன கேட்டார்?

By vinoth

Updated on:

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம் ஜி ஆர், தமிழ் சினிமாவில் 1948 ஆம் ஆண்டு வெளியான ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர்.

எம் ஜி ஆரின் சினிமா வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். எம் ஆர் ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடி பிழைத்து வந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அப்போது அவரின் குரலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதனால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற அச்சம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் அதன் பிறகுதான் அவர் புகழின் உச்சிக்கு சென்றார்.

   

இந்நிலையில் எம் ஜி ஆர் குனடடி பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரைப் பார்க்க சிவகுமார் சென்றுள்ளார். உள்ளே போனதும் ‘நீ சிவகுமார் தானே’ என்றும் எம்ஜிஆர் கேட்டாராம்.. இதனை அறிந்ததும் மகிழ்ச்சியான சிவகுமாரிடம் “உன் அம்மாவுக்கு இப்போது கை எப்படி இருக்கிறது” எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டதும் சிவகுமார் கண்கள் கலங்கி நெகிழ்ச்சியாகிப் போனாராம்.

ஏனென்றால் எம் ஜி ஆர் குண்டடி படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் காவல்காரன் ஷூட்டிங்கில் சிவகுமாரோடு இணைந்து நடித்துள்ளார். அப்போது சோகமாக இருந்த சிவகுமாரிடம் என்னவென்று விசாரிக்க “எனது தாய்க்கு கையில் அடிபட்டு ஆறு மாத காலம் வீட்டில் இருந்ததாகவும், தனக்கு தெரிந்தால் சினிமா வாழ்க்கை பாழாகி விடுமோ என தன்னிடம் மறைத்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் மருத்துவமனையில் சந்திக்க சென்ற போது அவரிடம் இதை கேட்டு நலம் விசாரித்துள்ளார். எம் ஜி ஆரின் இந்த பண்பை வியந்து நெகிழ்ந்துள்ளார் சிவகுமார்.