Connect with us

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

CINEMA

பஞ்சதந்திர பட நடிகருக்கு.. “50 லட்சத்தை வட்டியுடன் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்”.. என்ன காரணம் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் யூகி சேது என்கின்ற சேதுராமன். பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமலஹாசன் சேர்ந்து நடித்திருந்தார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான சுரேஷ்குமார் என்பவரிடம் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் கடனாக வாங்கி இருக்கின்றார்.

கடன் தொகையை 6 மாதத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதி அளித்து இருக்கின்றார் யூகி சேது. ஆனால் சொன்னபடி கடன் தொகையை திரும்ப செலுத்தவில்லை, யோகி செய்துவுக்கு எதிராக சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவநீதிமன்றத்தில் சுரேஷ்குமார் சார்பாக அவரது மருமகன் அஸ்வினி குமார் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

   

 

வழக்கு விசாரணையில் கடன் தொகையுடன் 7 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மேல்முறையீடு செய்த யூகி சேது தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்கை தொடர்ந்து இருக்கிறார்கள் என்றும் ஆவணங்களில் உள்ள கையெழுத்து தன்னுடைய கையெழுத்து அல்ல என்று கூறியிருந்தார். ஆனால் விசாரணை செய்த நீதிபதி கடன் பெற்றவரின் கையெழுத்து உறுதியாகியுள்ளதால் 50 லட்சம் ரூபாயை 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து திரும்பி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top