தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடக்கின்றார். அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் சூட்டிங் சென்னை, கேரளா, தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகின்றது. அவ்வபோது படம் தொடர்பான அப்டேட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மற்றொரு நடிகர் இணைந்திருக்கின்றார். அதாவது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்ட யுகேந்திரன் தற்போது கோட் திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இவர் மறைந்த நடிகரும் பாடகருமான மலேசிய வாசுதேவனின் மகன் ஆவார். வில்லன்களில் ஒருவராக அவர் நடித்திருக்கின்றார். இதற்கு முன்னதாக விஜயுடன் சேர்ந்து திருப்பாச்சி, பகவதி உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார். 15 வருடத்திற்கு பிறகு தற்போது விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார்.
இதுக்கு குறித்து அவர் பகிர்ந்திருந்ததாவது முதல் நாளை விஜய் அவரிடம் நன்றாக பேசினாராம். 18 வருடங்கள் ஆகியதால் தன்னை நினைவில் இருக்குமா என்று யோசனையுடன் விஜய்யுடன் பேச அவர் அனைத்தையும் ஞாபகம் வைத்து தன்னிடம் நன்றாக பேசியதாக நெகிழ்ச்சியாக கூறி இருந்தார்.