cho

சோ கொடுத்த வாழ்த்து மடல்.. MGR கேட்ட சிரிக்க வைக்கும் கேள்வி…

By admin on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் இல்லாத இடம் பிடித்தவர் MGR. இன்றைய நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் MGR.

   

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடித்தார் MGR. பின்னர் சினிமாவில் நுழைந்து நடிகராக உயர்ந்தார். MGRரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.

   

MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் MGR. தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு திருப்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் நுழைந்தார். தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR .

 

MGR மிகவும் நல்ல மனம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். வாரி கொடுக்கும் வள்ளல் மட்டுமல்லாமல் எல்லா சக நடிகர்களுடனும் பாரபட்சம் பார்க்காமல் நட்புடன் பழகுபவர். அடிக்கடி காமெடியாகவும் பேசுவார் எம்ஜிஆர். அதுபோல் ஒரு சம்பவம் இருக்கிறது.

து என்னவென்றால் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சோ எம்ஜிஆர் அவர்களிடம் ஒளிவிளக்கு நீங்கள் நடித்த நூறாவது படம். அதற்கு விழா எடுக்கலாம் இல்லையா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் அறிஞர் அண்ணா உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். இந்நிலையில் விழா எடுக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். சரி என்று கேட்டுக்கொண்டே சோ மறுநாள் எம்.ஜி.ஆர்க்கு வாழ்த்து மடல் ஒன்றை எழுதிக் கொண்டு வந்திருக்கிறார்.

அந்த காலத்தில் திருமணம் என்றாலும் பிறந்தநாள் என்ன கொண்டாட்டம் என்றாலும் வாழ்த்து மடல் பரிசாக கொடுப்பது வழக்கம். எல்லோரும் அதை பிரேம் போட்டு மாட்டி வைத்துக் கொள்வர். அதேபோல் சோ வாழ்த்து மடல் எம்ஜிஆர் ஆக எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார் எம்ஜிஆர். சோ என்ன திருப்பி திருப்பி பாக்குறிங்க ஐயா எழுத்துப் பிழை எதுவும் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் சிரித்துக்கொண்டு இப்படி இரண்டு பக்கமும் வாழ்த்து மடல் எழுதிக் கொண்டு வந்திருக்கிறீர்களே நான் இதை எப்படி பிரேம் போட்டு மாட்டி வைப்பது என்று சிரித்துக் கொண்டே கேள்வி கேட்டிருக்கிறார் எம்ஜிஆர்.