தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், களம் 5 முனைப் போட்டியாகச் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். திரளான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசியல் எதிரிகளையும் மறைமுகக் கூட்டணிகளையும் கடுமையாகச் சாடிப் பேசினார்.
பிரச்சாரத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், “தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதிப்படுத்தி வருகிறோம். முதல் 100 நாட்களிலேயே ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 முதல் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கப்படவுள்ளதுடன், திருப்பூரில் நவீன நீச்சல் குளமும் அமைக்கப்படும். அண்ணாவை மறந்து, திமுகவுடன் மறைமுகக் கூட்டு சேர்ந்து சுயநலமாகச் சுற்றுபவர்கள் நாம் அல்ல; மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகளைச் சாடிய அவர், “எம்மதமும் சம்மதம் என்பதைத் தாண்டி, எம்மதமும் நம் மதம் என்ற நம்பிக்கையோடு கிருஷ்ண ஜெயந்தி, கிறிஸ்துமஸ், பக்ரீத் என அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறோம். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும் ஒன்றுதான், வெளியே மட்டுமே வேஷமிடுகிறார்கள். மக்கள் தீர்ப்பை மதிக்காமல் சதி வேலைகளில் ஈடுபடும் ‘மற்றும் பலர்’ இருவருக்கும் ஒரே ஓனர் தான் செயல்படுகிறார். சாதாரண மக்களைத் தேர்தலில் நிற்கவைத்து, குறுநில மன்னர்களைத் தோற்கடிக்கும் மக்கள் ஆட்சியைத் தவெக நடத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
தனது உரையின் நிறைவாக, “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போல, இன்றும் தைரியமாக இந்த திமுகவை எதிர்ப்பது இந்த விஜய் மட்டும்தான்; அது எம்.ஜி.ஆரின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து அப்பா ஆட்சி, ஆனால் இப்போது நடப்பது நமது வீட்டுப் பிள்ளைகளின் உண்மையான மக்களாட்சி. நமக்கு பாடம் புகட்ட நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்” எனக் கூறி, ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து தவெகவை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…
தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…
மங்களூரு சுருத்கல்லில் உள்ள 'மங்களூர் ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' ஆலையில், உயர் அழுத்த குளிரூட்டும் பிரிப்பான் வெடித்து சிதறியதால்…
மீரட் நீதிமன்றம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலையில், அவரது மனைவி முஸ்கான்…
பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதிக சம்பளம் தந்த மதிப்புமிக்க ஐ.டி. வேலையைத் துறந்துவிட்டு ஆட்டோ ஓட்டி வரும்…