தாராபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பங்கேற்று வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து உரையாற்றினார். முன்னதாக, பிற்பகல் 3 மணிக்கு விஜய் வருகை தருவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே அவர் பிரச்சார மேடைக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து தொகுதிப் பொறுப்பாளர் அருண் ராஜ் மற்றும் வேட்பாளர் சத்யபாமா ஆகியோர் உரையாற்றிய பின்னரே விஜய் தனது பிரச்சார உரையைத் தொடங்கினார்.
இந்தக் கூட்டத்தில் விஜய்யின் பேச்சு வழக்கம் போலன்றி உற்சாகம் குறைந்தே காணப்பட்டது. வழக்கமான தனது தீவிரமான பிரச்சார பாணியில் இருந்து விலகி அமைதியான தொனியில் அவர் பேசினார். திமுகவை வழக்கம்போல விமர்சித்தாலும், ‘முதலமைச்சர் ஸ்டாலின்’ என்ற பெயரை அதிகம் உச்சரிக்காமல் தனது உரையை அமைத்துக் கொண்டார். அதேவேளையில், பாஜகவைப் பற்றிய எவ்விதக் கடுமையான விமர்சனங்களையும் அவர் தனது உரையில் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுகவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் “மற்றும் பலர்” என்ற சொல்லாடல் மூலம் அக்கட்சியை வழக்கத்தை விடக் கூடுதல் காரசாரமாக விஜய் விமர்சித்தார். இருப்பினும், காலை முதலே திரண்டிருந்து காத்திருந்த தவெக தொண்டர்களுக்கு விஜய்யின் இந்த மந்தமான உரை பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. இதனால் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, தொண்டர்கள் சாரை சாரையாக கூட்டத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கினர்.
விஜய்யின் பேச்சில் உற்சாகம் இல்லாததால் அப்செட்டான தொண்டர்கள் மேடையைப் பொருட்படுத்தாமல் வெளியேறிய அதேவேளையில், அவர வரவேற்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் கரும்புகளை அங்கு திரண்டிருந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். தொண்டர்கள் கலைந்து சென்றதையும், பொருட்களை எடுத்துச் சென்ற காட்சிகளையும் அங்கிருந்த ‘ஒன்இந்தியா தமிழ்’ செய்திக்குழு நேரடியாகப் படம் பிடித்துப் பதிவு செய்தது.
தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…
தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…
மங்களூரு சுருத்கல்லில் உள்ள 'மங்களூர் ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' ஆலையில், உயர் அழுத்த குளிரூட்டும் பிரிப்பான் வெடித்து சிதறியதால்…
மீரட் நீதிமன்றம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலையில், அவரது மனைவி முஸ்கான்…
பெங்களூருவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதிக சம்பளம் தந்த மதிப்புமிக்க ஐ.டி. வேலையைத் துறந்துவிட்டு ஆட்டோ ஓட்டி வரும்…