“வெயிட் அண்ட் சீ… இன்னும் பல இடைத்தேர்தல்கள் வரும்”… பரபரப்பை கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்…. அதிர்ச்சியில் அதிமுக, திமுக….!

Spread the love

தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 7 சட்டமன்றத் தொகுதிகளில், வழக்குகள் நிலுவையில் இல்லாத தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன. இத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவினாலும், ஆளும் தமிழக வெற்றி கழகம், திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு தன் செல்வாக்கை நிரூபிக்க தவெக முயன்று வரும் நிலையில், ஒரு தொகுதியில் கூட தவெக வென்றுவிடக் கூடாது என்பதில் திமுகவும் அதிமுகவும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக அமைச்சர் நிர்மல் குமார், எதிர்க்கட்சிகளைத் காரசாரமாக விமர்சித்துப் பேசினார். அதிமுகவில் இருந்து பலர் தவெகவில் இணைந்து வருவதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “திமுகவுடனும் ஸ்டாலின், உதயநிதியோடும் சேர்ந்து ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதைப் பற்றிப் பேச தகுதியோ வெட்கமோ இல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தன் சொந்தச் செலவில் கட்டிய தலைமை அலுவலகத்திற்குள் நுழையும் அருகதை கூட அவருக்குக் கிடையாது” என்று காட்டமாகக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து திமுக அரசு ஏன் இன்னும் முழுமையாக விசாரிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார். கொடநாட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன என்றும், இந்த விவகாரத்தில் திமுக ஏன் மௌனம் காக்கிறது என்றும் வினவினார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு ஆவணங்களை எடுக்கவே கொடநாட்டிற்குச் சென்றதாகக் கூறிய டிடிவி தினகரன், தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர்களின் அரசியல் மாற்றத்தைக் கடுமையாகச் சாடினார்.

கடந்த நான்கு மாதங்களாக முதல்வர் விஜய் தலைமையில் தமிழகத்தில் நேர்மையான, ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாகப் பெருமிதம் தெரிவித்த அமைச்சர் நிர்மல் குமார், லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் சுட்டிக்காட்டினார். ஆளும் அரசைக் கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் குறுக்கு வழியில் சதி செய்வதாகவும், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் அவர்களின் அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுவதாகவும் விமர்சித்தார். எனவே, வரும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு 100% வாக்களித்து வெற்றி பெறச் செய்து, திமுக மற்றும் அதிமுகவின் டெபாசிட்டை இழக்கச் செய்ய வேண்டும் என மக்களிடம் ஆவேசமாகக் கேட்டுக் கொண்டார்.

Nanthini

Recent Posts

விசிக-தவெக கூட்டணியை உடைக்கப் பார்க்கிறதா பாமக?…. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு…. அடுத்த டுவிஸ்ட்….!

தவெக மற்றும் பாமக இடையே கூட்டணி அமையவுள்ளதாக பரப்பப்படும் வதந்திகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையிலான…

2 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக்….. ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை….!

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எவ்வித முன்அறிவிப்புமின்றி ரூ.66.50 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இதன்…

7 minutes ago

ஐயோ கொடுமையே… இனிமே என்னால வாழ முடியாது… மகளைப் பறிகொடுத்த தாய் தூக்கிட்டுத் தற்கொலை… தெலங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தொர்ரூர் பகுதியில் குடும்பத் தகராறு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 25 வயதான அங்கிதே சின்னப்பள்ளி என்ற திருமணமான பெண்…

18 minutes ago

ஐயோ… வீடுகளை அதிரவைத்த பயங்கர வெடிப்பு… வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்… மங்களூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

மங்களூரு சுருத்கல்லில் உள்ள 'மங்களூர் ரீஃபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' ஆலையில், உயர் அழுத்த குளிரூட்டும் பிரிப்பான் வெடித்து சிதறியதால்…

25 minutes ago