பொம்பளைன்னு கூட பார்க்காம ஆபாச பேச்சு…. “இபிஎஸ்-திமுக டீலிங் போட்டதால் தான் வெளியே வந்தேன்”…. மேடையில் உடைத்த தவெக சத்யபாமா…!

Spread the love

அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தவெக வேட்பாளருமான சத்தியபாமா தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கூட்டத்தில் பேசிய அவர், “என்னை ஒரு பெண் என்றும் பாராமல் சமூக வலைதளங்களில் அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி வருகிறார்கள். இதன்காரணமாகக் கடந்த இரண்டு மாதங்களாக நான் செல்போனைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டேன். நான் தவறேதும் செய்யாததால் தான் மக்களிடம் துணிச்சலாக வந்து வாக்கு கேட்க முடிகிறது. என்னை இத்தனை துயரங்களுக்கும் ஆளாக்கிய திமுகவால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் மறைமுக உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால், என்னால் அதிமுகவிலிருந்து வெளியேறி இந்த இயக்கத்திற்கு வந்திருக்கவே முடியாது. அதற்கு அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வெளிப்படையாகப் பேசினார்.

மேலும் தவெக தலைவர் விஜய்யை வெகுவாகப் பாராட்டிப் பேசிய அவர், எம்.ஜி.ஆர் பிரசாரத்திற்கு வரும்போது மக்கள் இரண்டு நாட்கள் வரை வழியில் காத்திருப்பார்கள் என்று தனது தந்தை கூறியதை நினைவுகூர்ந்தார். “இன்று தளபதி விஜய்யைப் பார்க்கும்போது, அவர் எம்.ஜி.ஆரின் மறுபிறவியோ என்று தோன்றும் அளவிற்கு மக்கள் எழுச்சி அடைந்துள்ளனர்; அப்படிப்பட்ட ஒரு தொலைநோக்கு தலைவரின் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன்” என்றும் சத்தியபாமா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக திமுகவையும் அதிமுகவையும் கடுமையாகச் சாடி, விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு அவர் பேசிய இந்தப் பேச்சு, தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் தளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“பணியிடத்தில் உயர்வு… குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள்…” அக்டோபர் மாதத்தில் பணவரவை அள்ளப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்…! உங்க ராசி இருக்கான்னு செக் பண்ணி பாருங்க…!!

நவராத்திரி மற்றும் விஜயதசமி உள்ளிட்ட ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த அக்டோபர் மாதத்தில், ஜோதிட ரீதியாக மேஷம், கடகம், துலாம் மற்றும்…

4 minutes ago

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை… 4 சிறுவர்கள் செய்த அதிர்ச்சி செயல்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

இந்தோனேஷியாவின் பலெம்பாங் பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

17 minutes ago

“திமுக, அதிமுக-வை அட்டாக் செய்யப்போய் பேரதிர்ச்சி”…. பிரச்சாரத்தில் விஜய் செய்த மிகப்பெரிய ‘சொதப்பல்’… ஒற்றை வார்த்தையால் உறைந்துபோன தவெக தொண்டர்கள்….!

தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரம் தாரக மந்திரங்களுடன் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆற்றிய உரை…

19 minutes ago

“போனை வைடி”… கணவன் எச்சரித்தும் கேட்காத மனைவி…. அடுத்த நொடியே விழுந்த சடலம்…. மாங்காட்டில் அதிகாலையில் அரங்கேறிய அதிர்ச்சி….!

சென்னை அருகே மாங்காடு பகுதியில், செல்போன் பேச்சால் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் ஒருவர் கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்…

23 minutes ago

அட கடவுளே… நடுவானில் கொடூர மோதல்… 16,000 அடிக்குச் சரிந்து சவூதியில்… அவசரமாகத் தரையிறங்கிய விமானம்… அலறிய பயணிகள்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த பிளைடுபாய் விமானத்தில், காக்பிட்டில் இருந்த இரு விமானிகளுக்கிடையே திடீரெனக் கடுமையான…

25 minutes ago

FLASH NEWS: EPS-க்கு சொந்த ஊரிலேயே விழுந்த அடி…. தவெகவுக்கு மாறும் 1000 அதிமுக நிர்வாகிகள்…. செம்மலை கொடுத்த அடுத்த ஷாக்….!

முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செம்மலையின் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் விரைவில்அதிமுகவில் இருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக…

35 minutes ago