மெட்டிஒலி சீரியல் நடிகை ரேவதி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!!

By Nanthini on ஆனி 28, 2023

Spread the love

90களின் இறுதியில் வெளியான பல சீரியல்களின் பெயர்களுக்கே தனி ஒரு ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. அதாவது மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம் மற்றும் திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை. அதில் தமிழ் மக்களின் விருப்பமான இன்றளவும் பேசப்படும் சீரியல்களில் ஒன்றுதான் மெட்டிஒலி. சன் டிவியில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற மெட்டி ஒலி சீரியலின் டைட்டில் பாடல் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

   

திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான இந்த சீரியலில், டெல்லி குமார், காயத்ரி, உமா, ரேகா மற்றும் நீலிமா ராணி உள்ளிட்ட பலரும் நடித்தனர். அதன்படி சீரியலில் பவானி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நடிகை ரேவதிப்பிரியா. மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரேவதி தொடர்ந்து கோலங்கள், நிம்மதி மற்றும் கிரிஜா எம்எல்ஏ உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

 

இப்படி சீரியலில் பிசியாக இருந்த ரேவதி ஞானமுருகன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த ரேவதி நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் டிவியில் ராஜபார்வை மற்றும் பாரதிதாசன் காலனி ஆகிய சீரியல்கள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதனிடையே எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேவதி தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மெட்டி ஒலி சீரியல் நடிகை ரேவதியா இது என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Revathy Gnanamurugan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@revathygnanamurugan)