தமிழில் 90 காலகட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது மெட்டிஒலி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்த்து ரசித்த இந்த சீரியலில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த சீரியலை திருமுருகன் இயக்கி இருந்தார். ஐந்து சகோதரிகளின் வாழ்க்கை கதை தான் மெட்டி ஒலி சீரியல். இந்த தொடரின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மெட்டி ஒலி சீரியலில் செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இவருடைய உண்மையான பெயர் விஸ்வநாதன். தன்னுடைய கல்லூரி படிப்பு முடிந்ததும் இவர் சின்ன சின்ன நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஷ்வா. அதன் பிறகு இவர் தொழிலதிபரின் மகளை திருமணம் செய்து கொண்டு கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்டார். இறுதியாக பொன்னூஞ்சல் சீரியலில் இவர் நடித்திருந்தார்.
அதன் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததால் ஒரு சில படங்களில் நடித்த இவர் பிறகு மீடியாவை விட்டு விலகினார். தற்போது இவர் ஒரு கம்பெனி நடத்திவரும் நிலையில் சமீபத்தில் ஒரு youtube சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், திடீரென்று சீரியலில் இருந்து நான் காணாமல் போகவில்லை. மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு இன்னொரு மெட்டி ஒலி வேணும் என்று நினைத்தேன். அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதிலிருந்து குறைத்துக் கொண்டேன். எல்லா சீரியலும் மெட்டிஒலி ஆகும் என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி இருந்தா நல்லா இருக்கும் என்று நினைத்தேன்.
சோசியல் மீடியாவில் நிறைய என்ன பத்தி செய்திகள் வெளிவந்தது. நான் மூட்டை எல்லாம் தூக்கி இருக்கிறேன், நான் காசுக்காக கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கிறேன், செத்துப் போயிட்டேன், சினிமா வாய்ப்பில்லாததால் நான் செத்துப் போயிட்டேன் என்று சொல்லி இருக்காங்க. நான் சினிமா வாய்ப்பு தேடி ப்ரோடுயூசர் வீடு வீடாக போய் நின்று இருந்தேன் என்றெல்லாம் சொன்னாங்க. நான் என்னைக்குமே சீரியல் வாய்ப்பு தேடி போனது இல்ல. இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. இதுபோன்று என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு சும்மா 700 viewsகாக இப்படி பண்றாங்க. உங்களுக்கு வியூஸ் வேணும்னா என்கிட்ட வாங்க நான் கன்டென்ட் கொடுக்கிறேன் என்று அவர் பேசியுள்ளார்.