நாடுமுழுவதும் நாளை நமது நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருக்கும் இதனை கருதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும். ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை ஒவ்வொரு 7நிமிடங்களுக்கும் இடைவெளியிலும் , காலை 5 மணி முதல் நண்பகல் 12மணி வரையிலும் , இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மேலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
