வரும் நவம்பர் மூன்றாம் தேதியன்று சிவபெருமானுக்கு உரிய வழிபாடு செய்து வந்தால் நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பிரதோஷ வழிபாடுகளில் சனி பிரதோஷத்திற்கு அடுத்தபடியாக பக்தர்களால் நம்பப்படுவது சோமவார பிரதோஷம். இந்த நாளானது சோமன் என்பது சந்திரனை குறிப்பதாக புராணக்கதை உள்ளது. அதாவது சிவபெருமான் தலையில் சூடி இருக்கும் சந்திரன் உரிய நாளான திங்கட்கிழமை வருவதால் சோமவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் மனதில் உள்ள குழப்பங்கள், வேதனைகள், நிம்மதியின்மை, அழுத்தங்கள் இவற்றிற்கு சந்திரன் தான் காரணமாக பார்க்கப்படுகிறார்.
வழக்கமாக குடும்பத்தில் வரும் பிரச்சனைகள் இவரால் தான் கூட வருகிறது என்று சொல்லப்படுகிறது. அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ இந்த நாளில் விரதம் இருக்கலாம். வரும் நவம்பர் மூன்றாம் தேதி சோமவார பிரதோஷம் மாலை 4:30 மணி முதல் ஆறு மணி வரை இருக்கும். சிவபெருமானின் சுவாசமாக கருதப்படும் நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்து அருகம்புல் சாற்றி வழிபடலாம். விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் மௌன விரதம் இருப்பது நல்லது .அப்போதுதான் பக்தர்கள் மனதார வழிபட முடியும். இரு கண்களையும் மூடி ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிரதோஷம் நடக்கும் வேலையில் நமது வேண்டுதல்களை கூறி வழிபட்டால் துன்பம் அனைத்திலும் இருந்து விடுபட முடியும்.
