உங்களுக்கு உங்க குடும்பத்துக்கு ரொம்ப கண் திருஷ்டி இருக்குதுன்னு சொல்றாங்களா? – அப்போ உடனே இந்த பரிகாரத்தை பண்ணிடுங்க…!

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

கல்லடியில் இருந்து கூட தப்பிவிடலாம். ஆனால் கண் திருஷ்டியில் இருந்து தப்பவே முடியாது என்று சொல்வார்கள். ஒருவர் நல்ல நிலையில் முன்னேற்றமான வாழ்க்கையில், வசதியான செல்வாக்கான வாழ்க்கையை வாழும்போது பலரும் அதை பார்த்து பொறாமைப்படவே செய்வார்கள். இதனால் அவர்களுக்கு கண் திருஷ்டி ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக கண் திருஷ்டி பரிகாரமாக இதை நீங்கள் வீட்டில் செய்து பார்க்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு மா இலையின் மேலே வேப்பெண்ணெயை முழுமையாக தடவிவிட்டு அந்த இலையை ஒரு தட்டின் மேல் வைத்து உங்கள் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுங்கள். இது ஞாயிற்றுக்கிழமை முழுவதும் உங்கள் வீட்டில் அப்படியே இருக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக 9 மணிக்கு மேல் இந்த மா இலையை கொண்டு போய் அப்படியே நிலைவாசலுக்கு வெளியே வைத்து ஒரு கற்பூரத்தை அதன் மீது வைத்து எரித்து விடுங்கள். உங்கள் வீட்டை பிடித்திருக்கும் கண் திருஷ்டி கெட்ட சக்தி எதிர்மறையாற்றல் அனைத்தும் இந்த மா இலையோடு பொசுங்கிப் போய்விடும் என்பதுதான் நம்பிக்கை. நீங்களும் இதை செய்து பார்க்கலாமே…