நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே சர்வதேச சந்தையில் சுமார் ரூ.135 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு இயக்குனரக (DRI) திருச்சி மண்டல அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவரும், லாட்ஜ் நடத்தி வருபவருமான பைனான்சியர் சுகன் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 பாக்கெட்டுகளில் இருந்த 5 கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக, இந்தக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நாகை மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தொடர்பை வைத்து சுகன் உள்ளிட்ட கூட்டாளிகள் மூலம் நாகையிலிருந்து இலங்கைக்குப் பல ஆண்டுகளாகப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தச் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குத் தமிழகத்தில் உள்ள நடிகர், நடிகைகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பூபாலனின் கூட்டாளியான ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இவர்களின் நெட்வொர்க் குறித்து தொடர்ந்து நடைபெறும் விசாரணையில், மேலும் பல முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெத்தபெட்டமைன் கடத்தல் வழக்கில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டாவது குற்றவாளியான சுகனின் உறவினரான வேளாங்கண்ணி டிஎஸ்பி-யின் கார் ஓட்டுநர் சிவா மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலைய பெண் காவலர் சங்கீதா ஆகிய இருவரும் தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுகன் நடத்தி வரும் விடுதியில் கைப்பற்றப்பட்ட டைரியில், டிஎஸ்பி ஓட்டுநர் சிவா மற்றும் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் லஞ்சம் பெற்றது தொடர்பான விவரங்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக வேளாங்கண்ணி பகுதியைச் சேர்ந்த மேலும் சில காவல் அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிங்போ நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தை யாங் குவான்ஷெங் தன்…
வங்கக்கடலில் உருவெடுத்துள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்…
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மோகம் எந்த அளவிற்கு முற்றிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில், கடற்கரையில் பெற்றோர் ரீல்ஸ் எடுப்பதில் மூழ்கியிருக்க,…
உக்ரைனின் ஹர்கிவ் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான 'ஷாஹெட்' ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட…
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் குடும்பத்துடன் மலையேற்றத்திற்குச் சென்றபோது, 3 வயது சிறுவன் ரீலி எதிர்பாராதவிதமாக 100 அடி செங்குத்தான பாறையிலிருந்து…
தேன், புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஹரிச்சந்திரகர்க் பகுதியில் அமைந்துள்ள கொண்கண்கடா மலையடுக்கு உச்சியிலிருந்து குதித்து விஸ்வராஜ்சிங்…