300 கோடி பயனர்களுக்கு அதிர்ச்சி…. இனி வாட்ஸ்அப் இலவசம் இல்லை?… மெட்டா எடுத்த அதிரடி முடிவு….!

By Nanthini on தை 27, 2026

Spread the love

உலகளவில் சுமார் 300 கோடி பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலியில், விளம்பரங்கள் இல்லாத தடையற்ற சேவையை வழங்க மெட்டா நிறுவனம் புதிய கட்டண முறையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் வாட்ஸ்அப் ‘ஸ்டேட்டஸ்’ பகுதிகளுக்கு இடையே விளம்பரங்கள் தோன்றி வரும் நிலையில், பயனர்களின் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் சுமார் 4 யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.433) மாதக் கட்டணமாக வசூலிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த செயலியில் திடீரெனக் கட்டணம் கொண்டு வரப்படுவது உலகெங்கிலும் உள்ள பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், விளம்பரங்களுடன் கூடிய வழக்கமான வாட்ஸ்அப் சேவை தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும், விளம்பரங்கள் வேண்டாம் என்று கருதுபவர்கள் மட்டுமே இந்தக் கட்டணத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. மெட்டா நிறுவனத்தின் இந்த அதிரடி மாற்றத்திற்கு பயனர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.