தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர்.
இவர்களின் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் 1 ரூபாய் அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி கணக்கில் 1 ரூபாய் வரவு வைக்கப்பட்ட SMS உங்களுக்கு வந்தால், நீங்கள் திட்டத்தில் புதிதாக இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த முறையும் அரசு இதேபோல் தான் செய்தது குறிப்பிடத்தக்கது.
