ஐடி ஊழியர்களே உஷார்… “என் பேச்சைக் கேளுங்க”… வேலை போர் அடிக்குதா?… 8 மாதமாக வேலையில்லாத இளைஞரின் ஷாக்கிங் அட்வைஸ்…!!

Spread the love

வேலையை ராஜினாமா செய்ய நினைக்கும் நபர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, அபிஷேக் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தான், ஒரு சிறிய விபத்து காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கால வேலையின்மை, வேலை குறித்த தனது ஒட்டுமொத்த பார்வையையும் முற்றிலும் மாற்றிவிட்டதாக அவர் அந்தப் பதிவில் விளக்கியுள்ளார்.

தற்போதைய வேலையில் ஈடுபாடு இல்லாமல் அதனை விட்டுவிட நினைப்பவர்கள் தனது வார்த்தைகளைக் கவனமாகக் கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். வேலை செய்வதால் ஏற்படும் மன அழுத்தத்தை விட, எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பது பல மடங்கு அதிக மன உளைச்சலைக் கொடுக்கும் என்பதைத் தனது அனுபவபூர்வமாக உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். எனவே, வெறுமனே வேலைப் பளுவில் இருந்து தப்பிப்பதற்காக அவசரப்பட்டு வேலையை விட வேண்டாம் என்றும், எந்த வேலையில் இருந்தாலும் அதனைத் தொடர்ந்து செய்யுமாறும் அவர் அறிவுறுத்துகிறார்.

வேலையை விட்டுவிட்டாலே வாழ்க்கையில் நிம்மதி கிடைத்துவிடும் எனத் தவறாக நினைக்க வேண்டாம் என எச்சரிக்கும் அவர், தற்போதைய வேலையிலிருந்து தப்பிப்பதை விட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான வேறு வேலைகளைத் தேடுவதே சிறந்தது எனக் கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் வேலையின்மையால் ஏற்படும் அழுத்தங்கள் குறித்தும், ஒரு வேலை என்பது வெறும் சம்பளத்தை மட்டும் தாண்டிய பல விஷயங்களைக் கொடுக்கிறது என்பது குறித்தும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

Gayathri

Recent Posts

பெண்களே இப்படியா?… “உங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”… போலீசை மிரட்டிய பெண்… மதுபோதையில் தகராறு… சாலையில் பெரும் பரபரப்பு…!!

மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…

6 minutes ago

மனைவியுடன் சண்டை… பாதாள கால்வாயில் குதித்த கணவன்… நொடியில் எடுத்த விபரீத முடிவு… வெள்ளமென பாயும் கழிவுநீரில் மாயமான வாலிபர்… கால்வாயில் தேடுதல் வேட்டை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…

18 minutes ago

எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க…! அத்துமீறி நுழைந்த கும்பல்… குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை… சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…

31 minutes ago

டேய் எல்லாரும் வாங்கடா…! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள்… இரு தரப்பினர்கள் மோதல்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…

40 minutes ago

கலிகாலத்தின் உச்சம்..! உயிரோடு இருக்கும் ஒருவருக்கு பிண்ட தானமா?… இரண்டு மகன்களும் மரணம்… அடுத்த தலைமுறையை நம்பாத முதியவர்… பின்னணியில் உள்ள கண்ணீர் கதை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…

52 minutes ago

வருங்காலம் இளைஞர்கள் இப்படியா?… தவறை உணரவில்லை… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… காவலர்களிடம் வாக்குவாதம்… சாலையில் பெரும் பரபரப்பு…!!

சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…

1 மணத்தியாலம் ago