குருகிராமில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வரும் சக்தி தரணி பாண்டே என்ற பெண், தனது மாதச் சம்பளத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வாடகையாகச் செலுத்தி வருகிறார். அவர் பணிபுரியும் பள்ளியிலிருந்து வெறும் 4 நிமிட நடக்கும் தொலைவில் உள்ள 1RK வீட்டில் வசித்து வரும் அவர், இந்த முடிவு நிதி ரீதியாகத் தவறாகத் தெரிந்தாலும், தான் இதை மாற்றப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அலுவலகத்திற்கு மிக அருகில் வசிப்பதால், இடைவேளையின் போது வீட்டிற்குச் சென்று சூடான உணவை உட்கொள்ளவும், எஞ்சிய பணிகளை முடிக்கவும் முடிகிறது என்று அவர் கூறுகிறார். தூரமான இடங்களுக்குச் சென்று குறைந்த வாடகையில் தங்கி பணத்தைச் சேமிப்பதை விட, தினமும் மெட்ரோ அல்லது ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தையும், மன அழுத்தத்தையும், ஆற்றலையும் மிச்சப்படுத்துவதே முக்கியம் என அவர் கருதுகிறார்.
https://www.instagram.com/reel/DeHWm9yS6eE/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
மேலும், 20-களில் சேமிப்பில் கவனம் செலுத்துவதை விடத் தனது நிம்மதிக்கும் வளர்ச்சிக்கும் முதலீடு செய்வது அவசியம் என்றும், கூடுதல் நேரத்தைப் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வீடியோக்கள் உருவாக்கவும் பயன்படுத்துவதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இவரது இந்த முடிவுக்கு இணையத்தில் சிலர் “மன நிம்மதியை விட எதுவும் பெரிதல்ல” என ஆதரவு தெரிவித்து வரும் அதே வேளையில், சிலர் “50% மேல் வாடகைக்குச் செலவிடுவது தவறான நிதி நிர்வாகம்” என விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் 'மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா' பள்ளியைச்…
தெலங்கானா மாநிலம் இப்ராஹிம்பட்டினம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ மால்ரெட்டி ரங்கா ரெட்டி, பேருந்தில் பயணம் செய்த இரண்டு இளம்பெண்களிடம் அநாகரிகமாக…
உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகரில் உள்ள புல்பட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர்…
இந்தியாவைச் சேர்ந்த பிரணவ் என்ற பயண விளாக்கர், சீனாவின் குவாங்சூ நகரில் உள்ள ஹைசூ பகுதியில் தான் கண்ட காட்சிகளை…
தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அன்றாடப்…
வேலையை ராஜினாமா செய்ய நினைக்கும் நபர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக, அபிஷேக் என்ற இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில்…