உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தெளராலா என்ற பகுதியில் உள்ள கிராமங்களில் நிர்வாண கும்பல் என்று அழைக்கப்படும் மர்மகும்பலால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். விவசாய நிலங்களில் இருந்து திடீரென்று நிர்வாணமாக வெளியே வரும் அந்த நபர்கள் தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. பலாரா கிராமம் அருகே சில நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற பெண் ஒருவரை அவ்வாறு இரண்டு பேர் சூழ்ந்துள்ளனர்.
அந்தப் பெண் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். அவமானத்தால் இந்த சம்பவங்கள் இதற்கு முன் வெளியே கூறப்படாமல் இருந்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்கவும் மக்களின் அச்சத்தை போக்கவும் கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பெண் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கூறியதால் காவல்துறையினர் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…