தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பக்கத்தில் அழகாபுரிபட்டண கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்ட பிரபு (26). இவர் தன்னுடைய வீட்டில் உள்ள ஒரு அறையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் பெயரில் காவல்துறையினர் மணிகண்டபிரபு வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு ஒரு அறையில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. பிறகு இதனை தொடர்ந்து அங்கிருந்த மணிகண்ட பிரபுவை காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதில் பல தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பட்டப்படிப்பை முடித்துவிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சமூக வலைதளத்தின் மூலம் ஆர்டர் செய்து கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை வாங்கியுள்ளார். அதில் பிரிண்ட் அவுட் எடுப்பது தொடர்பான பணிகளை பகுதி நேரமாக செய்து கொண்டுள்ளார். அது தவிர வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது இரவு நேரங்களில் தன்னுடைய செல்போனில் யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். அதை பார்த்து தன்னுடைய அறையில் வைத்திருந்த ஜெராக்ஸ் எந்திரத்தில் 500, 200 ரூபாய் நோட்டுகளை அப்படியே ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளார்கள். பிறகு சிறையில் அடைத்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…