இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததால் இப்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த்சாமி கூறியதாவது, மெய்யழகன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி.

இது ரொம்ப அழகான கதை. என் வாழ்க்கையில் நடந்த கதை என கூறியிருந்தார். இந்த நிலையில் மெய்யழகன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் இடையே ஒரு நெருக்கமான உறவு இருப்பது தெரிகிறது. அரவிந்த்சாமி கார்த்தியின் எமோஷன் சீன்கள் தியேட்டரில் ரசிகர்களை மனதைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கமலஹாசனின் குரலில் இடம் பெற்றுள்ள பாடலும் பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது.
