6 வருஷமா இவர எப்படி விட்டு வச்சாங்கன்னு தெரியல.. கதையை படிச்சதும் கண்ணீர் வந்திருச்சு.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி..!!

By admin on புரட்டாதி 15, 2024

Spread the love

இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

கார்த்தியின் அடுத்த படம் “மெய்யழகன்”.. வெளியான சூப்பர் அப்டேட்!

   

படத்தின் சூட்டிங் முடிவடைந்ததால் இப்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்யழகன் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கார்த்தி கூறியதாவது, ஜெய் பீம் பாட இயக்குனர் ஞானவேல் என்னிடம் பிரேம்குமார் அற்புதமான ஒரு கதையை வைத்துக்கொண்டு உங்களை தொடர்பு கொள்ள தயங்குகிறார் என கூறினார்.

   

Ananda Vikatan - 07 August 2024 - Meiyazhagan Exclusive: "அன்பின் முதல் புள்ளி '96'... இரண்டாவது புள்ளி 'மெய்யழகன்'!" |director premkumar interview about Meiyazhagan movie - Vikatan

 

எனக்காக எழுதிய கதையை விட்டு விடக்கூடாது என நானே அவரை அழைத்து கதை கேட்டேன். 96 முடிச்சுட்டு 6 வருஷம் இந்த மனுஷன் படம் பண்ணல. எப்படி அவங்க பிரண்ட்ஸ் இவரை விட்டு வச்சாங்கன்னு தெரியல. ப்ரொடியூசர் தான் இவரை எப்படி விட்டு வச்சாங்கன்னு தெரியல. பிரேம்குமார் பணம், புகழ் பின்னாடி ஓடுற ஆள் கிடையாது அந்த கலைக்காகவும் எடுத்துகாகவும் மட்டுமே இருக்கிற ஒரு அபூர்வ சில மனிதர்கள் மாதிரி பொருட் காட்சியில் வைக்கிற பீஸ் இவரு.

மெய்யழகன் கதை படமாக வரவேண்டாம் என நினைத்தேன்… இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

இப்படி ஒரு ஆள் அழகான ஸ்கிரிப்ட் கொண்டு வந்து கொடுத்தாரு. அந்த ஸ்கிரிப்ட் படிச்சேன். புக்கை படிக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது. படித்து முடித்துவிட்டு அந்த புக்கை பத்தி என்ன சொல்றதுன்னு தெரியல. மனசுக்குள்ள அவ்வளவு உணர்ச்சிகளை கொண்டு வருது. அப்பா அம்மா கிராமத்தில் இருந்து வந்தவங்க. நான் சென்னையில் படிச்சேன். ஆனா ஹாலிடேஸ்க்கு கிராமத்தில் தான் இருந்தோம். இந்த புக் படிக்கும் போது இது தமிழ்நாடு, இதுதான் நாம அப்படிங்கிற உணர்வு வந்துட்டே இருந்துச்சு என கூறியுள்ளார்.