தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கார்த்தி. இவரது தந்தை சிவகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த பிரபல நடிகர் மற்றும் இவரது சகோதரர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்தி தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பிரபலமானார்.

பா ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் கார்த்திக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பல கமர்சியல் வெற்றி படங்களில் நடித்தார் கார்த்தி. தீரன் அதிகாரம் ஒன்று கடைக்குட்டி சிங்கம் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்த வருடம் சமீபத்தில் கார்த்தியும் அரவிந்த்சாமியும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மெய்யழகன்.
பிரேம் குமார் இயக்கத்தில் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் மக்களிடையே ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்றது. இது ஒரு மனதிற்கு இதமான படமாக இருந்தது. எந்த ஒரு வன்மம் இல்லாமல் அன்பால் நடக்கக்கூடிய ஓர் இரவில் நடக்கக்கூடிய சம்பவத்தை அடிப்படையாக வைத்து மெய்யழகன் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் மெய்யழகன் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்ப்பை காட்டிலும் கேரளாவில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. அங்குள்ள மக்கள் இந்த படத்திற்கு மிகவும் நல்ல விமர்சனங்களை கூறியிருக்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

இதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால் தமிழ் சினிமா ரசிகர்கள் மசாலா படங்களை பார்த்து பழகிவிட்டனர். ஆனால் கேரளத்து சினிமா ரசிகர்கள் அங்கு வெளிவரக்கூடிய மலையாள படங்கள் முக்கால்வாசி வாழ்வியல் சம்பந்தமாகவே இருக்கும் ஒன்று, இரண்டு படங்கள்தான் மசாலா படங்களாக வரும். அதனால் தமிழ்நாட்டு மக்களுடைய ரசனையை காட்டிலும் கேரள மக்களின் சினிமா ரசனையானது கொஞ்சம் ஒரு படி மேலாகத்தான் இருக்கிறது. அதனால் தான் கேரளாவில் மெய்யழகன் திரைப்படம் வரவேற்பு பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது.
